பள்ளிக்கல்வி இயக்குநர் பதவியை ரத்து செய்து, அதற்கு பதிலாக பள்ளிக்கல்வித் துறை ஆணையராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமிக்கப்படுவதாக முன்னதாக தலைமைச் செயலர் ஆணை பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், “கடந்த 200 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித்துறையில் இருந்த இயக்குநர் பதவியை ஒழித்துவிட்டு அதற்கு பதிலாக ஆணையராக ஐஏஎஸ் அலுவலர் ஒருவரை தமிழ்நாடு அரசு நியமித்திருக்கிறது.
இயக்குநர் பதவி பல விதங்களில் தமிழ்நாட்டின் கல்விச் சூழலுக்கு அவசியமானதாகும். எனவே அதை மீண்டும் கொண்டுவர வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ’பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை ரத்து செய்து ஆணையமாக மாற்றும் முடிவு’ - சீமான் எதிர்ப்பு