ஈரோடு: சத்தியமங்லகம் புலிகள் காப்பகத்தில் தமிழ்நாடு கர்நாடகத்தை இணைக்கும் திம்பம் மலைச்சாலையில் இரவுப் போக்குவரத்தைத் தடை செய்யும் வகையில்,சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மக்கள் கருத்துகளைக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், பிப் 10ம் முதல் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 வரை இரவு நேரப் போக்குவரத்து சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதற்கிடையே ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை மக்கள் கருத்து கேட்புக்கூட்டம் நடத்தப்பட்டு அங்கு மக்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு- கர்நாடக இடையே பயணிக்கும் திம்பம் மலைப்பாதையில் இரவு நேரப் போக்குவரத்து தடை விதிப்புக்கு அரசியல் கட்சிகள், வாகன உரிமையாளர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வன விலங்கு பாதுகாப்பு என்ற ஒரு அம்சத்தை மட்டும் வைத்து இதைப் பார்க்கக் கூடாது.
இரு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள்,தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இதைப்பா்க்க வேண்டும். இரவுப் போக்குவரத்தைத் தடுத்தால், பகல் போக்குவரத்தும் தானாகவே முடங்கும். இதுதான் கடந்த காலத்திலும் நடந்தது.
எனவே, வன விலங்குப் பாதுகாப்பை வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் செய்ய வாகனங்களின் வேகத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் ஒரு நிலையெடுத்து, வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தி, வரும் பிப் 10ம் தேதி திம்பம் மலை உச்சியில் மக்கள் போராட்டம் நடத்தித் திரண்டு அரசின் கவனத்தை ஈர்க்கவும் இப்போரட்டத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் கலந்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:திம்பம் மலைப் பாதை விவகாரம்: மலைவாழ் மக்கள் போராட்டம் அறிவிப்பு