சென்னை கோயம்பேட்டில் யுவராஜ் என்பவர் ஆடு, கோழி இறைச்சி கடை நடத்திவருகிறார். இவr தனது கடையில் இருந்த 43 ஆடுகளை குடோனில் வழக்கம்போல் அடைத்து வைத்து பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பூட்டை கள்ள சாவி போட்டு திறந்து, குடோனில் இருந்த 26 ஆடுகளை திருடி காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். ஆடுகளை திருடிச் செல்லும் காட்சி அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை அடிப்படையாக வைத்து ஆடுகளை திருடிச் சென்ற நபர்களை கோயம்பேடு காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க... விலையுயர்ந்த சைக்கிள்களை திருடிய பள்ளி மாணவன் - எச்சரித்த காவல்துறை!