புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பூஜ்யம் நேரத்தில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா, ”இரண்டு, மூன்று மாடுகள் வைத்திருப்பவர்கள் அரசின் கூட்டுறவு சங்கத்தில் பால் ஊற்றி சம்பாதித்து வரும் நிலையில், புதுச்சேரி அரசின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான பாண்லே விவசாயிகளிடம் ஒரு லிட்டருக்கு 31 ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்ய மறுக்கின்றது.
ஆனால் தனியாரிடம் 40 ரூபாய்க்கு மேல் வெளியில் பணம் கொடுத்து தவறாக கொள்முதல் செய்கின்றனர். அவ்வாறு தவறாக கொள்முதல் செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறாக பால் கொள்முதல் செய்வதால் ஆண்டிற்கு ரூ.7 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. இந்தப்பணம் கிராமப்புற விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணம். எனவே தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பாண்லே நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டும்” என அவர் பேசினார்.
இதையும் படிங்க: ஈபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு