ETV Bharat / state

‘இந்தியாவில் பல கட்சி இருக்கலாம் ஆனால் பிஜேபிக்கு மாற்று காங்கிரஸ் தான்’ - திருநாவுக்கரசர் எம்பி - திருநாவுக்கரசர் எம்பி

இந்தியாவில் பல கட்சி இருக்கலாம் ஆனால் பாஜக-வுக்கு மாற்று காங்கிரஸ் தான்; மோடிக்கு மாற்று ராகுல் காந்தி தான் என நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

Etv Bharat திருநாவுக்கரசர் எம்பி
Etv Bharat திருநாவுக்கரசர் எம்பி
author img

By

Published : Sep 25, 2022, 9:16 PM IST

சென்னை: காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை இந்திய அரசியல் அமைப்பு பாதுகாப்பு வேண்டி தமிழக காங்கிரஸ் கட்சியின் 8 அமைப்பு இணைந்து தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 75 கிலோ மீட்டர் நடைபயணம் நடைபெற உள்ளது.

இதன் துவக்க விழா சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம், திக் விஜய் சிங், சல்மான் குர்ஷித், அகில இந்திய காங்கிரஸ் தமிழக மேலிட பொறுப்பாளர் குண்டு ராவ், தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், குமரி ஆனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

தொடக்க விழாவின்போது முதலில் மேடையில் பேசிய எம்.பி. திருநாவுக்கரசர், "அரசியல் சட்டத்தை காக்க வேண்டும் என்ற பயணம் இங்கு தொடங்கி உள்ளது. அதே போல் ராகுல் காந்தி பயணம் கூட தமிழ்நாட்டில் தொடங்கியது, எனவே இது தமிழ்நாட்டிற்கு பெருமை. இந்தியாவில் பல கட்சி இருக்கலாம் ஆனால் பிஜேபி க்கு மாற்று காங்கிரஸ் தான். மோடி க்கு மாற்று ராகுல் காந்தி தான். அதுமட்டுமின்றி மோடிக்கு மாற்று ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவர்.

இந்த பயணம் இந்தியாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அவர் எடுத்து வைக்கும் ஒரு ஒரு அடியும் பிஜேபி யை விழும் அடியாக இருக்க வேண்டும். மேலும் இது பிஜேபிக்கு பயம் ஏற்படுத்தி உள்ளது. வளர்ச்சி என்பது அனைவருக்கும் இருக்க வேண்டும், அதானியை மட்டுமே வளர்ந்தால் அது யானைக்கால் நோய், வளர்ச்சி அல்ல" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, "அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற யாத்திரை காங்கிரஸ் கட்சியின் ஓ பி சி அணி, மீனவ அணி, எஸ் சி அணி என உள்ளிட்ட எட்டு அணிகள் சேர்ந்து இந்த நடத்துகிறது.

அரசியல் சட்டம் என்பது மக்களின் பாதுகாக்கும் அமைப்பு. இந்த நாடு என்பது பல கலாச்சாரம், மொழி உள்ள நாடு. அனைவரும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். இதற்கு எதிராக ஆர் எஸ் எஸ் செயல் பட்டு வருகிறது. அரசியல் சட்டத்தை காக்க வேண்டும் என்ற யாத்திரை இந்தியா முழுவதும் நடைபெறவேண்டும் என்று கருதி தற்போது இங்கு தொடங்கி உள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆ.ராசா உருவபொம்மையினை எரிக்க முயற்சி - நெல்லையில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.