ETV Bharat / state

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர் வைப்பதில் தவறு இல்லை - ஜெயக்குமார் - அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

சென்னை: சட்டத்திற்கு உட்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர் வைப்பதில் எந்த தவறும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
author img

By

Published : Oct 3, 2019, 11:25 AM IST

சென்னை குறளகத்தில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளையொட்டி கதர் சிறப்பு விற்பனைத் தொடக்கவிழா நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கதர்த்துறை அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு கதர்த்துணி வழங்கி சிறப்பித்தனர். பின்னர் மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்பு விற்பனையை தொடக்கி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நீட் தேர்வை பொருத்தவரை தமிழ்நாட்டிற்குத் தேவை இல்லை என்பது தான் அரசின் நிலைப்பாடு. இதைத் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வு மத்திய அரசு நடத்துகிறது, இதில் ஆள்மாறாட்டம் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

நடிகர் கமல் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறார், நாட்டு மக்களின் நலனில் கவனம் செலுத்துவதில்லை. வசூல் ராஜா எம்.பிபி.எஸ் படத்தின் மூலம் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் என்பதை முதலில் வித்திட்டவர் கமல் தான்.

சுபஸ்ரீ மரணத்திற்குப் பிறகு பொது இடங்களில் பேனர் வைக்க கூடாது என்று குறிப்பிட்டு இருந்தோம், ஆனால் சட்டத்திற்கு உட்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர் வைப்பதில் எந்த தவறும் இல்லை. காங்கிரஸ் வேட்பாளர்கள் ஏழை என்று கே.எஸ் அழகிரி சொல்வது இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவையாகும்.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

உலகிலேயே முதலாளித்துவ கட்சி என்று ஒன்று இருந்தால் அது காங்கிரஸ் கட்சிதான். உலகில் முதல் 100 இடங்களில் உள்ள மிட்டா மிராசு தாரர்களில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தான் இருப்பார்கள்.

நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் தன்னந்தனியாக நகைகளை அணிந்துகொண்டு சாலையில் செல்வதையே முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக நான் கருதுகிறேன் என்று காந்தி சொன்னார் அந்த நிலை தமிழகத்தில் தான் இன்றும் உள்ளது. சினிமாவுக்கு சென்று விட்டு இரவு ஒரு மணிக்கு தனியாக செல்லலாம் அதற்கு நான் கேரன்டி என்றார்.

Intro:சட்டத்திற்கு உட்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர் வைப்பதில் எந்த தவறும் இல்லை அமைச்சர் ஜெயக்குமார்

Body:சென்னை குறளகத்தில் மகாத்மா காந்தியின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு கதர் சிறப்பு விற்பனை துவக்கவிழா நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கதர் துறை அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு கதர் துணி வழங்கி சிறப்பித்தனர் பின்னர் மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்

நீட் தேர்வை பொருத்தவரை தமிழகத்திற்கு நீர் தேவை இல்லை என்றுதான் தமிழக அரசின் கொள்கை மத்திய அரசு தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி வருகிறோம்

நீட் தேர்வு மத்திய அரசு நடத்துகிறது இந்த ஆள் மாறாட்டம் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்

கமலைப் பொறுத்தவரை திடீரென்று வருவார் திடீரென்று காணாமல் போய்விடுவார் புதிதாக கட்சி தொடங்கப்பட்ட கமல் தேர்தல் சமயத்தில் மட்டும் மக்களிடையே வந்து தேர்தல் முடிந்த பிறகு பிக்பாஸ் வீட்டிற்கு செல்வது எந்த வகையில் நியாயம்

பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது கலாச்சார சீரழிவு உள்ளே என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை அலிபாபா குகை போல் எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே வருகிறார்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்றும் கமல் கவனம் செலுத்துகிறார் தவிர நாட்டு மக்களின் நலத்தில் கவனம் செலுத்துவதில்லை

வசூல் ராஜா படத்தின் மூலம் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் முதலில் வித்திட்டவர் கமல் தான்

சுபஸ்ரீ மரணத்திற்குப் பிறகு பொது இடங்களில் பேனர் வைக்க கூடாது என்று குறிப்பிட்டு இருந்தோம் ஆனால் சட்டத்திற்கு உட்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர் வைப்பதில் எந்த தவறும் இல்லை

காங்கிரஸ் வேட்பாளர்கள் ஏழை என்று கே எஸ் அழகிரி சொல்வது இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை

உலகிலேயே முதலாளித்துவ கட்சி ஒன்றை என்று இருந்தால் அதை காங்கிரஸ் கட்சிதான்

உலகில் முதல் 100 இடங்களில் உள்ள மிட்டா மிராசு தாரர்களின் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தான் இருப்பார்கள்

ஆனால் அதிமுகவில் கொடி கட்டிய தொண்டன் இன்று கொடி கட்டிய காரில் பவனி வருகிறான் என எடுத்துக் கொள்ளுங்கள் நான் சாதாரண காசிமேட்டில் பிறந்தவன் இன்று முதல் அமைச்சராக உள்ளேன்

இன்றைக்கு ஒரு பெண் சுதந்திரமாக தன்னந்தனியாக நகைகளை அணிந்துகொண்டு இரவு 12 மணிக்கு தனியாக செல்கிறோம் அன்றைக்குத்தான் முழுமையாக சுதந்திரம் கிடைத்ததாக நான் கருதுகிறேன் என்று காந்தி சொன்னார் அந்த நிலை தமிழகத்தில் தான் இன்றும் உள்ளது சினிமாவுக்கு சென்று விட்டு இரவு ஒரு மணிக்கு தனியாக செல்லலாம் அதற்கு நான் கேரன்டி என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

Conclusion:சென்னை குறளகம் மகாத்மா காந்தியின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா நடைபெற்றது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.