ETV Bharat / state

'அதிமுக ஆட்சியில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை'

author img

By

Published : Aug 25, 2021, 1:54 PM IST

அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கமளித்துள்ளார்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் கலந்துகொண்ட அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு, அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவுத் துறையில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் கூட்டுறவு வங்கிகள் நவீனமயமாக்கப்பட்டதாகவும் கடந்த பத்தாண்டுகளில் முறைப்படி பயிர்க்கடன் வழங்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு இரண்டு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டதாகவும் கரோனா காலத்தில் இரண்டாயிரத்து 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாகவும் செல்லூர் ராஜு தெரிவித்தார். மேலும் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட தினக்கூலி 200 ரூபாயை தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் பெண்கள் அந்தத் திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்துவதாகவும், வயதான பெண்கள் முழு விவரம் தெரியாமல் அனைத்துப் பேருந்துகளிலும் ஏறிவிடுவதால் பாதி வழியில் இறக்கிவிடும் சூழல் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற திட்டத்தை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் எனவும் செல்லூர் ராஜு கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: கலைஞர் நூலகத்திற்காக பென்னிகுவிக் இல்லம் இடிப்பா? - பேரவையில் விவாதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.