ETV Bharat / state

இந்துக்கள் யார்... ஆர்எஸ்எஸ்... யார்? - விளக்கம் கொடுத்த கமல்! - godse

சென்னை: கோட்சே ஓர் இந்து தீவிரவாதி என்று கூறி சர்ச்சையில் சிக்கிய கமல், அதுகுறித்து கேட்டதற்கு இந்துக்கள் யார்? ஆர்.எஸ்.எஸ். யார்? என்பதை பிரித்து பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

kamal
author img

By

Published : May 17, 2019, 12:14 PM IST

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசியிருந்தார். கமலின் இந்தப் பேச்சுக்குப் பல தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. சிலர் ஆதரவும் தெரிவித்தனர். இதனிடையே, கமல்ஹாசன் பங்கேற்ற பரப்புரை கூட்டங்களில் அவர் மீது காலணி வீசப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இப்படியொரு சூழலில் பரப்புரை செய்ய வேண்டாமென சூலூரில் கமல்ஹாசனின் பரப்புரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், "இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியதில் தவறில்லை. இது உருவான சர்ச்சை அல்ல... உருவாக்கப்பட்ட சர்ச்சை" என்றார்.

கமல்ஹாசன் பேட்டி

இந்துக்கள் தீவிரவாதி இல்லை என பிரதமர் மோடி சொல்கிறார் என்ற கேள்விக்கு, "பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். சரித்திரம் பதில் சொல்லும். கோட்சே குறித்து இதற்கு முன்பு நான் மெரினாவில் பேசியுள்ளேன். அதை பெரிதுபடுத்தாதவர்கள், அரவக்குறிச்சியில் பேசியதை பெரிதுபடுத்திவிட்டனர். சூலூரில் நான் பரப்புரை மேற்கொள்ள தடை விதித்திருப்பதில் அரசியல் இருக்கிறது. சூலூரில் பதற்றமான சூழல் இருந்தால் தேர்தலை ஏன் தள்ளிவைக்கக்கூடாது. கைதுக்கு நான் பயப்படவில்லை. கைது செய்யப்பட்டால் பதற்றம் அதிகரிக்கும். அதனால் என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது. இந்துக்கள் யார்? ஆர்.எஸ்.எஸ். யார்? என்பதை பிரித்து பார்க்க வேண்டும்" என்றார்.

Intro:Body:

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியதில் தவறில்லை

இது உருவான சர்ச்சை அல்ல; உருவாக்கப்பட்ட சர்ச்சை

பிரதமர் மோடிக்கு  நான் பதில் சொல்ல வேண்டியதில்லை; சரித்திரம் பதில் சொல்லும்

என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம்தான் அதிகரிக்கும்; அதனால் கைது செய்யாமல் இருப்பது நல்லது

எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் உள்ளனர். தாக்குதல் 

நடத்தியவர்களுக்கு பின்னால் வேறு யாரோ உள்ளனர்

கேள்வி: பல்கலைக்கழக பணியை செய்வதில் அரசியல் தலையீடு 

இருக்கிறது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா 

கூறியிருக்கிறாரே?

கமல்ஹாசன்: அரசியல் தலையீடு எனக்கே இருக்கிறது, என்னை 

இன்றைய பரப்புரையை செய்யவிடாமல் தடுத்துள்ளதும் அரசியல் தலையீடுதான்

http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63847-i-am-not-afraid-of-being-arrested-says-kamalhaasan.html

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.