சென்னை மயிலாப்பூரில் உள்ள லஸ் சர்ச் பகுதியில் வசித்து வருபவர் விஷால் அகர்வால் (50). இவர் பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 17ஆம் தேதி தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில் இன்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 10 லட்சம் ரூபாய் காணாமல் போயுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனே மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், கடந்த ஒரு வருடமாக தனது விட்டிற்கு காவலாளியாக இருந்த நேபாளத்தைச் சேர்ந்த தீபக் (30) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர் தற்போது தலைமறைவாகிவிட்டதாவும் தெரிவித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் தலைமறைவான தீபக் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மின்வாரிய ஊழியர் வீட்டில் 45 சவரன் நகை கொள்ளை!