ETV Bharat / state

பயங்கர ஆயுதங்களுடன் வந்து சிசிடிவி கேமராக்களை உடைத்துக் கொள்ளை? - சிசிடிவி கேமரா

சென்னை: பயங்கர ஆயுதங்களுடன் வந்து சிசிடிவி கேமராக்களை உடைத்து மொபைல் ஷாப்பில் கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

cctv camera
author img

By

Published : May 18, 2019, 12:29 PM IST

திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா. இவர் வில்லிவாக்கம் பாட்டை ரோட்டில் எம்.எம் என்ற மொபைல் ஷாப் நடத்தி வருகிறார். அவரது கடை அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் மீரான் என்பவர் இன்று அதிகாலை நோன்பு நோற்பதற்காக தன் கடை அருகில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை எடுக்க வந்திருக்கிறார். அப்போது முஸ்தபாவின் மொபைல் கடைக்குள் சத்தம் கேட்டிருக்கிறது. யார் அது என மீரான் குரல் கொடுத்திருக்கிறார். உள்ளே இருந்து பயங்கர ஆயுதங்களுடன் வந்த 3 நபர்கள் மீரானை தாக்க முயற்சித்துள்ளனர். தப்பி ஓடிய மீரான், அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்துள்ளார்.

அந்த அடையாளம் தெரியாத நபர்கள், உடனடியாக பைக்கில் ஏறி தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து முஸ்தபாவுக்கு தகவல் அளித்தார் மீரான். பதறி அடித்து ஓடி வந்த முஸ்தபா, கடைக்குள் சென்று பார்த்தபோது 4 சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டு, ரூ.6 லட்சம் மதிப்பிலான மொபைல்கள், ரூ.97 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ஐசிஎப் காவல் நிலையத்தில் முகமது முஸ்தபா புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவி கேமராக்களை உடைத்து செல்போன் கடையில் கொள்ளை.

பயங்கர ஆயுதங்களுடன் வந்த 3 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை.

திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா. இவர் வில்லிவாக்கம் பாட்டை ரோட்டில் எம்.எம் என்ற  பெயரில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

 இந்த நிலையில் முகமது முஸ்தபாவின் செல்போன் கடைக்கு அருகில் உள்ள பெட்டிக் கடைக்காரரான மீரான் என்பவர் இன்று அதிகாலை நோன்பு திறப்பதற்காக தனது பெட்டிக் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றுள்ளார்.

 அப்போது முகமது முஸ்தபா செல்போன் கடையில் இருந்து சில நபர்கள் பேசும் சத்தம் கேட்டுள்ளது. உடனே மீரான் யார் அது?என்று கேட்கவே கடையைத் திறந்து பயங்கர ஆயுதங்களுடன் வெளியே வந்த மூன்று நபர்கள் மீரானை தாக்க முயற்சி செய்துள்ளனர்.

 உடனே அங்கிருந்து தப்பித்து ஓடிய மீரான் தனது உறவினர்கள் இருவரை அழைத்துக்கொண்டு மீண்டும் வந்துள்ளார்.

 இதை பார்த்த அந்த மர்ம நபர்கள் 3 பேரும் தாங்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து மீரான் முகமது முஸ்தபா விற்கு தகவல் கொடுத்துள்ளார்.

 தகவலின் பேரில், வந்த முகமது முஸ்தபா கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது கடையில் உள் 97 ஆயிரத்து பணம் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.மேலும், கடையில் உள்ள 4 சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து முகமது முஸ்தபா ஐசிஎப்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்போன் கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.