சென்னை: நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “பீஸ்ட்” படத்தின் ட்ரைலர் நேற்று (ஏப்.02) வெளியானது. ட்ரைலர் வெளியீட்டை கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்களுக்கு இலவசமாக ட்ரைலர் போடப்பட்டன.
இதேபோல், திருநெல்வேலியிலுள்ள ஒரு திரையரங்கில் ட்ரைலர் போடப்பட்டது. அப்போது ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் திரையரங்கில் இருந்த கண்ணாடிகள், நாற்காலிகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால், திரையரங்கிற்கு ஏராளமான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளியீட்டு உள்ள ஆடியோ பதிவில், ரசிகர்களை திருப்திப்படுத்தவும் தங்களின் திரையரங்குகளின் பெருமைக்காகவும் இதுபோன்ற இலவச நிகழ்ச்சிகள் திரையரங்கு உரிமையாளர் தரப்பில் ஏற்படுத்தப்படுகின்றன.
இதனால் அவர்களுக்குத்தான் பாதிப்பு. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் திரையரங்கின் உரிமம் ரத்து செய்யப்படும் சூழல் உள்ளது.
எனவே திரையரங்கின் உள்ளே எது நடந்தாலும் அதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே இதுபோன்ற தேவையில்லாத நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: சாண்டி மாஸ்டர் நடனத்தில் 'வேண்டாம் போதை' விழிப்புணர்வு வீடியோ