சென்னை ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகர் ஒன்பதாவது தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி என்பவரது மனைவி சத்யா(45). சத்யாவின் கணவர் தண்டாயுதபாணி ஐந்து வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக சத்யா வாக்குப்பதிவு மையத்துக்குச் சென்றுள்ளார்.
அப்போது அவருடைய பெயரை சரிபார்த்த அலுவலர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத்தால் சத்யா வாக்களிக்க வாய்ப்பு மறுத்து விட்டனர். ஆனால், அவரிடம் வாக்காளர் அடையாள அட்டையும், கடந்தமுறை வாக்களித்ததற்கான பூத் சிலிப்பும் இருந்தது. மேலும் ஐந்து வருடத்திற்கு முன்னர் இறந்துபோன அவருடைய கணவரின் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், சத்யாவின் பெயர் இடம் பெறவில்லை.
இதனால் கோபமுற்ற சத்யா அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடும் அதிருப்தியடைந்த சத்யா தேர்தல் அலுவலர்களை திட்டிக்கொண்டே வீட்டிற்குச் சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:’அனைவரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும்’ - முதலமைச்சர் வேண்டுகோள்