ETV Bharat / state

’தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு வருவேன்’ - மிரட்டிய இளைஞர் வீடியோ வைரல் - காவலர்களை மிரட்டும் வாலிபர் காணொலி

டீக்கடை காரரின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு வருவேன் என மிரட்டிய இளைஞரின் பரபரப்பு வீடியோ வைரலாகி வருகிறது.

’தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு வருவேன்’ - மிரட்டிய வாலிபரின் வீடியோ வைரல்

author img

By

Published : Jul 21, 2022, 6:57 PM IST

சென்னை: பாண்டி பஜார் பாரதி நகரில் அமைந்துள்ள ஒரு டீக்கடைக்கு நேற்று (ஜூலை 20) வந்த இளைஞர் ஒருவர் டீ மற்றும் பிஸ்கட் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சாப்பிட்ட பொருளுக்கு பணம் தராமல் இளைஞர் டீக்கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

பின்னர் இது குறித்து டீக்கடை உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் பாண்டிபஜார் காவல்துறையினர் அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரச்சனையில் ஈடுபட்ட இளைஞர் கூடுவாஞ்சேரியை சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து வாங்கிய பொருளுக்கு பணம் தருவதாக ரமேஷ் காவல்துறையினரிடம் கூறியதால் அனுப்பி வைத்தனர்.

’தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு வருவேன்’ - மிரட்டிய வாலிபரின் வீடியோ வைரல்

இதையடுத்து, சிறிது நேரத்தில் காவல் நிலையத்திற்கு கஞ்சா போதையில் வந்த ரமேஷ் திடீரென கையில் வைத்திருந்த பிளேடால் கை மற்றும் கழுத்தை கிழித்து கொண்டு காவலர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். மேலும், தன்னை முடிந்தால் கைது செய்யுங்கள், தான் ரவுடியின் மகன் என மிரட்டியும் உள்ளார்.

மேலும், என் மீது எந்த தவறும் இல்லை எனவும் டீக்கடை உரிமையாளரின் தலையை வெட்டி நாளை காவல் நிலையத்திற்கு கொண்டு வருவேன் என காவல்துறையினரை மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் காவல்துறையினர் ரமேஷ் மீது வழக்குபதிவு செய்து நாளை (ஜூலை 22) விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: ஃப்ரீ பயர் விளையாட்டால் விபரீதம் - இரு தரப்பினரிடையே தகராறு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.