ETV Bharat / state

16 ஏக்கர் நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகர்: பாதிக்கப்பட்டவர் தீக்குளிக்க முயற்சி

author img

By

Published : Jul 8, 2021, 4:14 PM IST

தனது 16 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக பாஜக பிரமுகர் மீது புகார் அளித்தவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Suicide  and issue  The victim tried to set fire because of land issue  chennai land issue  chennai land issue man tried to suicide  chennai news  chennai latest news  crime news  நில அபகரிப்பு  சென்னையில் நில அபகரிப்பு  land mafia  நில அபகரிப்பில் பாதிக்கப்பட்டவர் தீக்குளிக்க முயற்சி  தீக்குளிக்க முயற்சி  நில அபகரிப்பு குறித்து புகார்  தாக்குதல்  தற்கொலை முயற்சி  suicide attempt
தீக்குளிக்க முயற்சி

சென்னை: ஆவடியைச் சேர்ந்த வெங்கட் நாராயணன், திருவள்ளூர் மாவட்டம் வயலாநல்லூர் கிராமத்தில் தனக்குச் சொந்தமாக உள்ள 16 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்து தரக்கோரி, நிலத்தின் உரிமத்தை பாஜக பிரமுகர் ரமணனுக்கும், அவரது நண்பர் சதீஷ் குமாருக்கும் வழங்கியுள்ளார்.

நில அபகரிப்பு புகார்

ஆனால் அவர்கள் நிலத்தை விற்பனை செய்து தருவதாகக் கூறி, அதனை அபகரிக்க முயற்சி செய்துவந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து வெங்கட் நாராயணனுக்கும், அவரது மனைவிக்கும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வெங்கட் நாராயணன், கடந்த 6ஆம் தேதி வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு, தனது குடும்பத்துடன் சென்று, நில அபகரிப்புப் பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார்.

தாக்குதல்

இதனைத் தொடர்ந்து, பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகத்தில், நிலத்தின் விற்பனை உரிமத்தை ரத்துசெய்த தடங்கல் மனுவையும், காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 7) அளித்துள்ளார்.

இதனை அறிந்த ரமணனும், அவரது நண்பர்களும் நேற்று மாலை வெங்கட் நாராயணனின் வீட்டிற்குச் சென்று, அவரது மனைவி, குழந்தையை கத்தி முனையில் மிரட்டி, வெங்கட் நாராயணனை வலுக்கட்டாயமாக பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகம் அழைத்துச் சென்றுள்ளனர்.

தற்கொலை முயற்சி

அங்கு அவருக்குச் சொந்தமான 16 ஏக்கர் நிலத்தை, வேறொரு பெயருக்கு மாற்றி பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெங்கட் நாராயணன் இன்று (ஜூலை 8) காலை சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று, அங்கு தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், வெங்கட் நாராயணனைத் தடுத்து, உடனடியாக அவரை வேப்பேரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் புகார் அளிக்க வந்த வெங்கட் நாராயணனின் மனைவி நித்யாவிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். காவல் ஆணையர் அலுவலகத்தின் முன் நடந்த இச்சம்பவத்தால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: 17 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோவில் இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.