ETV Bharat / state

ஆறு ஐஏஎஸ் அலுவலர்கள் இடமாற்றம்! - அதிகாரிகள்

சென்னை:தமிழ்நாட்டில் ஆவின் ஆணையர் உட்பட ஆறு ஐஏஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

transfer 6 IAS officers
transfer 6 IAS officers
author img

By

Published : Dec 25, 2020, 10:57 AM IST

இதுதொடர்பாக தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

  • தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணைச் செயலாளர் அம்ரிதா ஜோதி, சமர சிக்‌ஷா கூடுதல் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
  • நில நிர்வாகத்துறை இணை ஆணையராகப் பதவி வகிக்கும் கற்பகம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
  • இ-சேவை இணை இயக்குனர் சரஸ்வதி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
  • பால் உற்பத்தி மற்றும் பால் வளர்ச்சி ஆணையர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் பொருட்கள் கூட்டமைப்பு லிமிடெட் துறை மேலாண் இயக்குனர் வள்ளலார், தொழில் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
  • தொழில் துறை ஆணையர் நந்தகோபால், பால் உற்பத்தி மற்றும் பால் வளர்ச்சி ஆணையர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் பொருட்கள் கூட்டமைப்பு லிமிடெட் துறை மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
  • கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் மாவட்ட கிராம அபிவிருத்தி (திருவாரூர் மாவட்டம்) கமல் கிஷோர் இ-சேவை இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.