ETV Bharat / state

"சட்டப்பேரவையின் மாண்பை காத்த முதலமைச்சர் ஸ்டாலின்" - பாராட்டிய சபாநாயகர் - who protected the dignity

தமிழ்நாட்டில் பெரும்பொருளாக மாறியுள்ள சட்டப்பேரவை முதலமைச்சர் உரையின்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்த விவகாரத்தில், 'ஆளுநர் உரையின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணியமாக செயல்பட்டார் எனவும்; முதலமைச்சரின் இச்செயலுக்கு தனது பாராட்டுகள்' எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 11, 2023, 3:35 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையின்போது, அசாதாரண சூழல் ஏற்பட்ட நிலையில் சட்டப்பேரவையின் மாண்பை மதிநுட்பத்தோடு செயல்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காப்பாற்றியதற்கு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று (ஜன.11) பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் வரும் காலங்களில் பேரவையின் மாண்பை களங்கப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் உரையின்போது, ஆளுநர் உரைக்கு முன்னரும் அதன் பின்னரும் மன்ற உறுப்பினர்கள், பேரவைத் தலைவர் முன் நின்று எவ்வித கோஷங்களையும் எழுப்பியிருக்கக் கூடாது எனவும்; வருங்காலத்தில் அதனை தவிர்க்கக்கூடிய வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பாடு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஒருபோதும் ஆளுநர் முன் நின்று களங்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், எந்தவித செயலையும் செயல்படுத்தக் கூடாது எனத் தெரிவித்தார். எதிர்ப்பை தெரிவிப்பவர்கள் தங்கள் இருக்கையில் இருந்து எதிர்ப்பை தெரிவித்துவிட்டு அதன் பின்னர் வெளிநடப்பு செய்ய வேண்டுமானால் செய்து கொள்ளலாம் எனவும்; அதே நேரத்தில், பேரவைத் தலைவர் இருக்கை முன், கீழே அமர்ந்து தர்ணா போராட்டம் உள்ளிட்டவற்றில் ஈடுபடக்கூடாது எனவும் கூறினார்.

ஆளுநர் உரையானது அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டபின், அதனை வாசிக்க ஆளுநரும் முழுவதும் இசைவு அளித்த நிலையில் அதில் வாசிக்கும்போது, ஆளுநர் சில பகுதிகளை நீக்கியதோடு, சில பகுதிகளைச் சேர்த்து வாசித்தார். இதனால் ஒரு அசாதாரண சூழல் நிலவியது. இந்த நிலையில், பேரவையின் மாண்பைக் காக்கும் வகையில் விதி எண் 17ஐ தளர்த்தி ஆளுநர் உரை அச்சிடப்பட்டதை பதிவு செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் மதிப்போடு செயல்பட்டு, சட்டப்பேரவையின் மாண்பை பாதுகாத்தார் என்றும்; அவருக்கு தனது நன்றியை தெரிவிப்பதாகவும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

பிற மாநிலங்களுக்கு ஓர் முன்மாதிரியான சட்டமன்றமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது எனவும்; மேலும் தீர்மானத்தை கொண்டு வந்தும் பிற மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய வகையில் முதலமைச்சரின் செயல்பாடு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "ஆளுநரை தாக்கி பேசக் கூடாது" - திமுக எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.