ETV Bharat / state

விடுதியில் தனியாக தங்கியிருப்பவர்களை குறிவைத்து மடிக்கணினி, செல்போன் திருடியவர் கைது - chennai crime news

சென்னையில் தனியாகவும், விடுதிகளில் தங்கி இருப்பவர்களைக் குறிவைத்து மடிக்கணினி, செல்போன்களைத் திருடிவந்தவரை காவலர்கள் கைதுசெய்துள்ளனர்.

chennai crime news
விடுதியில் தனியாக தங்கியிருப்பவர்களை குறிவைத்து லேப்டாப், செல்போன் திருடிய கொள்ளையன் கைது
author img

By

Published : Dec 30, 2020, 6:43 AM IST

சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள விடுதியொன்றில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார் கிரிதரன். இவருடைய, செல்போன், மடிக்கணினி திருடுபோய்விட்டதாக கிண்டி காவல் நிலையத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி விசாரணையைத் தொடங்கிய காவலர்கள், செல்போன், மடிக்கணினியைத் திருடியவர் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜதுரை என்பதைக் கண்டுபிடித்தனர்.

பின்னர், அவரை செல்போனில் யார் யாருடன் பேசுகிறார் என்பதைக் கேட்டு, திருச்சியில் வைத்து காவல் துறையினர் கைதுசெய்தனர். அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், "ராஜதுரை 2011ஆம் ஆண்டிலிருந்து மடிக்கணினி, செல்போன்களைத் திருடிவருகிறார்.

5ஆம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ள அவர் கட்டுமான பணிகளில் வேலை செய்தபோது தூங்கிக்கொண்டிருக்கும் கட்டுமான தொழிலாளிகளின் செல்போன்களைத் திருடி தனது திருட்டுத் தொழிலை தொடங்கியுள்ளார்.

விடுதியில் தனியாக தங்கியிருப்பவர்களைக் குறிவைத்து மடிக்கணினி, செல்போன் திருடியவர் கைது

குறிப்பாக, சென்னையில் மாமல்லபுரம், பட்டினப்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகளில் அறை எடுத்து தனியாகத் தங்கிப்படிக்கும் கல்லூரி மாணவர்கள், வேலைசெய்யும் ஐடி ஊழியர்களின் வீடுகளை நோட்டமிட்டுத் திருடியுள்ளார்.

திருடியவற்றைத் திருச்சியில் புவனேஸ்வர் என்ற நண்பர் மூலம் பாகங்களைப் பிரித்து விற்பனை செய்துள்ளார். 2011ஆம் ஆண்டுமுதல் திருடிவந்தாலும், இடையில் திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு காய்கறி வியாபாரம் செய்துவந்துள்ளார். ஆனால், கரோனா காலத்தில் பண கஷ்டம் ஏற்பட்டதால், மீண்டும் திருடத் தொடங்கியுள்ளார்" என்பது தெரியவந்தது.

ராஜதுரை கொடுத்த தகவலின் அடிப்படையில், 11 மடிக்கணினிகள், 9 செல்போன்களைப் பறிமுதல்செய்துள்ள காவல் துறையினர், அவரை சென்னை அழைத்துவந்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சிறுமியிடம் பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.