சென்னை: 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவின் மீது மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை(செப்.16) வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணைத்தேர்வு முடிவின் மீது மறுகூட்டல் வேண்டி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது தேர்வெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 16ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.
இதில் இடம்பெற்றுள்ளவர்கள் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் பட்டியலில் இடம் பெறாத தேர்வெண்களுக்கான விடைத்தாட்களின் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அஸ்ஸாம் யானைகளை திருப்பி அனுப்புவதாக இல்லை: தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் பதில்