ETV Bharat / state

ரயில் நிலையப்பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துகளில் அடிக்கப்பட்ட கறுப்பு ஸ்பிரே! - chennai fort railway station

ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகளை கறுப்பு ஸ்பிரே மூலமாக அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 31, 2023, 9:57 PM IST

சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் ஐந்தாவது நடைமேடையில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய எழுத்துகள் அடங்கிய இரண்டு பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று காலை பெயர் பலகைகளில் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்ததை மட்டும் கறுப்பு ஸ்பிரே மூலமாக சிலர் அழித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உடனே, இது தொடர்பாக ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் ரயில்வே நிர்வாகம் அழிக்கப்பட்ட எழுத்துகளை மீண்டும் சீர் செய்தனர். இது குறித்து ரயில்வே நிர்வாகம் அளித்தப்புகாரின் பேரில் கடற்கரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பொது சொத்துகளை சேதப்படுத்துதல் என்ற பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஸ்பிரே அடித்த மர்ம நபர்களை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சிகள் இல்லாததால் வெளியில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்கள் யார் என்பதை தீவிரமாக தேடி வருகின்றனர். சமீபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பிரச்னை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஹிந்தி பெயர் பலகையை அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: viral video: குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.