ETV Bharat / state

இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா - பூங்கொத்து வழங்கி பாராட்டிய ரேலா மருத்துவமனை தலைவர்! - Indian Grand Master Pragyananda

உலக நம்பர் ஒன் செஸ் கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்சல்சனை தோற்கடித்து வெற்றி பெற்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ரேலா மருத்துவமனையின் தலைவர் பூங்கொத்து வழங்கி பாராட்டினார்.

indian-grand-master-pragyananda
indian-grand-master-pragyananda
author img

By

Published : Feb 26, 2022, 7:36 AM IST

சென்னை : இணையம் வழியாக நடைபெறும் எர்த்திங் மாஸ்டர்ஸ் எனும் ரேபிட் முறையிலான செஸ் தொடரின் 8ஆவது சுற்றில் பிரக்ஞானந்தாவும், கார்சல்னும் பிப். 21ஆம் தேதி மோதினார்கள்.

ரேபிட் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆடப்படும் போட்டியாகும். இந்த போட்டியில் உலகின் நம்பர் ஒன் செஸ் கிராண்ட் மாஸ்டர் கார்சலனை இந்திய நம்பர் ஒன் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தோற்கடித்தார். அதனை கௌரவிக்கும் வகையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல ரேலா மருத்துவமனை சார்பில் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக குழு இயக்குநர் பேராசிரியர் முகமது ரேலா, பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பிரக்ஞானந்தா செய்தியாளரிடம் பேசிகையில், "நான் எனது ஐந்து வயது முதல் செஸ் விளையாட ஆரம்பித்தேன். எனது பத்து வயதில் நேஷனல் ப்ளேயரில் தகுதி பெற்றேன். பின்னர் 12 வயது, 14 வயது என தொடர்ந்து எனது விளையாட்டை வெற்றி கண்டுள்ளேன்.

தற்போது 16 வயதில் வேர்ல்டு நம்பர் ஒன் கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியைப் பெற்றுள்ளேன். எனது விளையாட்டை சாதாரண முறையில்தான் விளையாடினேன். மீண்டும் இதுபோன்று உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட தயாராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : நளினிக்கு மேலும் 30 நாள் பரோல் நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.