ETV Bharat / state

இளைஞரை புகைப்படம் எடுத்த காவலர்... தனிநபர் பிரைவசியினை மீறுகிறதா போலீஸ்? - tamilnadu police

சென்னையில் இரவு நேர வாகன சோதனையில் காவல்துறையினர் வாகன ஓட்டிகளை நிறுத்தி புகைப்படம் எடுப்பதாகவும், அனுமதியின்றி படம் பிடிப்பது சட்டவிரோதமானது என ட்விட்டர் தளத்தில் இந்த விவகாரம் விவாதப் பொருளாகி வருகிறது.

பிரைவசி மீறுகிறதா காவல்துறை
பிரைவசி மீறுகிறதா காவல்துறை
author img

By

Published : Dec 9, 2022, 1:16 PM IST

சென்னை: ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சித்தார்த் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தகவலின்படி நேற்று இரவு தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை வழியாக செல்லும் போது, சில காவல்துறையினர் வழிமறித்ததாகவும் தனது அனுமதியின்றி தன்னை அவர்களது செல்போனில் படம் எடுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு சென்னை காவல்துறை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் காவல் துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில், ஃபேசியல் ரெககனைஸேன் சிஸ்டம் (Facial recognition System) எனும் குற்றவாளிகளை அடையாளம் கண்டறியும் முறைக்காக அவ்வாறு படம் பிடிக்கப்படுவதாகவும், அதனால் தாங்கள் கவலை அடையத்தேவையில்லை எனவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

பிரைவசி மீறுகிறதா காவல்துறை
இளைஞரை புகைப்படம் எடுத்த காவலர்... தனிநபர் பிரைவசியினை மீறுகிறதா போலீஸ்?

இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு நபர்கள் தாங்களும் இதுபோன்று காவல் துறையினரால் வாகனத் தணிக்கையில் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின்படி காவல்துறை கைது செய்த வாரண்டு பிறப்பிக்கப்பட்ட நபர்களை தான் படம் பிடிக்க வேண்டும் எனவும், சாலையில் செல்லும் அனைவரையுமே படம் பிடிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா எனவும் கேட்டு காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்களை காவல் துறை சேகரிப்பது சட்டவிரோதமானது எனவும் சுட்டிக்காட்டி விவாதித்து வருகின்றனர். சென்னை காவல் துறையில் கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக ஃபேஷியல் ரெகக்கனைஷேன் சிஸ்டம் (Facial recognition System) எனும் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண இது நடைமுறையில் உள்ளது.

இதற்காக உதவி ஆய்வாளர் ரேங்கிற்கு மேலுள்ள காவல் துறை அதிகாரிகளின் செல்போனில் இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த செயலியில் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள குற்றவாளிகளின் பெயர், புகைப்படங்கள் விவரங்கள் உள்ளடக்கி இருப்பதால் சந்தேகத்திற்கிடமான நபர்களை அந்த செயலின் மூலம் படம் பிடிக்கும்போது ஏற்கனவே பட்டியலில் உள்ள முகத்தோடு ஒத்துப் போனால் அவர்களை எளிதில் கண்டறிய முடியும்.

ஆனால், இரவு நேரங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் பெரும்பாலானவர்களை இதுபோன்று படம் பிடிப்பதால் சில நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கும் படம் பிடிக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் பிரச்னை ஏற்படுகிறது.

இது பற்றி சென்னை காவல் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்கும் போது, வாகனத்தணிக்கையில் முறையான ஆவணங்கள் இன்றி முறையான தகவல் அளிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கும் நபர்கள் மீது சந்தேகம் எழுந்தால் இந்த செயலியை பயன்படுத்தி அவர்கள் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளார்களா என்பதைக் கண்டறியலாம் எனவும், வாகனத்தில் வரும் அனைவரையும் படம் பிடிக்க அறிவுறுத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

பிரைவசி மீறுகிறதா காவல்துறை
பிரைவசி மீறுகிறதா காவல்துறை

அதே வேளையில் தனிப்பட்ட நபர்களின் புகைப்படங்களை காவல்துறை சேகரித்து வைத்துக் கொள்வதில்லை எனவும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: சிறைகளில் ஆபத்தான கைதிகளை கண்காணிக்க காவலர்களுக்கு பாடி வோர்ன் கேமரா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.