சென்னையில் கரோனா வைரஸ் (தீநுண்மி) வட சென்னை பகுதிகளில் குறைந்து தற்போது கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாக பரவிவருகிறது. இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம்கள் நடத்துவது, கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
தினமும் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துவருகிறது. இருப்பினும் அதிக கரோனா பரிசோதனைகளும் செய்கின்றனர். நேற்று(ஆக.31) மட்டும் 13,143 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் குணமடைந்தவரின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்துவருகிறது.
சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 597 பேர் கரோனா தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 626 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 13 ஆயிரத்து 224 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 2,747 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் கரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவரின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
கோடம்பாக்கம் - 13697 பேர்
அண்ணா நகர் - 13607 பேர்
ராயபுரம் - 12264 பேர்
தேனாம்பேட்டை - 11871 பேர்
தண்டையார்பேட்டை - 10606 பேர்
திரு.வி.க. நகர் - 9139 பேர்
அடையாறு - 9034 பேர்
வளசரவாக்கம் - 7401 பேர்
அம்பத்தூர் - 8230 பேர்
திருவொற்றியூர் - 4005 பேர்
மாதவரம் - 4241 பேர்
ஆலந்தூர் - 4135 பேர்.
சோழிங்கநல்லூர் - 3140 பேர்
பெருங்குடி - 3763 பேர்
மணலி - 1957 பேர்
சென்னையில் மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கியது! - சென்னை கரோனா பரிசோதனைகள்
சென்னை: சென்னையில் கரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,20,000-ஐ நெருங்கியுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
![சென்னையில் மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கியது! covid](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8637504-828-8637504-1598984305949.jpg?imwidth=3840)