ETV Bharat / state

மோட்டார் வாகனங்களை தீயிட்டு கொளுத்திய அடையாளம் தெரியாத நபர்: ஏன்? - Mysterious person set the motor vehicle on fire

சென்னையில் இருசக்கர வாகனங்களை தீயிட்டு கொளுத்திய அடையாளம் தெரியாத நபரை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.

மோட்டார் வாகனங்களை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்

author img

By

Published : Dec 19, 2022, 10:38 PM IST

சென்னையில் இருசக்கர வாகனங்களை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்

சென்னை: தாம்பரம் அடுத்த அகரம் தென்மாணிக்கம் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (54). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இன்று அதிகாலை திடீரென வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் எரிவதைக் கண்ட பிரேம் குமார் உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி அணைத்தார். ஆனால் அதற்குள் 2 வாகனங்களும் முற்றிலும் எரிந்து சேதமானது. தகவலறிந்து வந்த சேலையூர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.

மேலும் பிரேம் குமாரிடம் நடத்திய விசாரணையில், நேற்று மாலை தனது நண்பர் ஜெயின் என்பவர் மது அருந்துவதற்காக பணம் கேட்டு தனது வீட்டின் முன்பு தகராறில் ஈடுபட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.