சென்னையில் நேற்று (அக்.14) நள்ளிரவில் கோடம்பாக்கத்தில் இருந்து கார் ஒன்று தாறுமாறாக சென்றுள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக வடபழனி நோக்கி தாறுமாறாக சென்று கொண்டிருந்த காரை சில வாகன ஓட்டிகள் ஆற்காடு சாலையில் மடக்கிப் பிடித்தனர். குடிபோதையில் பெண் ஒருவர் அந்த காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து பொதுமக்களுடன் அந்தப் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர். குடிபோதையில் இருக்கும் பெண்ணை காப்பாற்ற முயன்றவர் பாஜகவைச் சேர்ந்த சென்னை மாவட்ட செயலாளர் பாலாஜி என்பதும், போதையில் இருக்கும் பெண் கர்நாடகாவைச் சேர்ந்த மாடல் அழகி ஆஷா வனிதா என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அப்பெண் மீது வழக்குப்பதிவு செய்து, காரை பறிமுதல் செய்தனர். பின்னர் ஆஷா வனிதாவை காலை ஆஜராகும்படி, தெரிவித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது!