ETV Bharat / state

தங்கம் என நினைத்து 100 சவரன் கவரிங் நகைகளை கொள்ளையடித்த கும்பல்! - 100 சவரன் கவரிங் நகை கொள்ளை

சென்னை: தாம்பரம் அருகே 15 சவரன் தங்க நகைகளை விட்டுவிட்டு, 100 சவரன் கவரிங் நகைகளை கொள்ளையர்கள் திருடிச்சென்ற சம்பவம் பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

the-mob-that-robbed-100-shaving-covering-jewelry-thinking-it-was-gold

author img

By

Published : Aug 19, 2020, 1:01 AM IST

சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில் வசித்து வருபவர் ஜீவானந்தம்(35). இவர் சேலையூர் பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 17) ஜீவானந்தம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அவரது பக்கத்து வீட்டுக்காரர் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வந்த ஜீவானந்தம், வீட்டிலிருந்து பீரோ உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, தாம்பரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பீரோவின் உள்ளே திறந்து பார்த்த போது 15 சவரன் தங்க நகை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் அவரது குழந்தைகளுடைய 100 சவரன் அளவிலான கவரிங் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கவரிங் நகைகளை தங்கம் என்று நினைத்து, உண்மையான தங்க நகைகளை கொள்ளையர்கள் விட்டுச்சென்றுள்ளனர். இருப்பினும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையர்களை பிடிக்க அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:வேலூர் அருகே வேனில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.