ETV Bharat / state

திமுகவின் புத்தி எப்பொழுதும் குறுக்கு புத்தி - கோகுலா இந்திரா சாடல் - intellectual

சென்னை: திமுகவின் புத்தி எப்பொழுதும் குறுக்கு புத்தி என அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுலா இந்திரா சாடியுள்ளார்.

கோகுலா இந்திரா
author img

By

Published : Mar 27, 2019, 7:57 PM IST

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டன. அமமுக வேட்பாளர் தெஹ்லான் பாகவி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமிலா நாசர் ஆகியோரின் வேட்புமனுக்கள் முதல் கட்டமாகவே ஏற்கப்பட்டது.

ஆனால் அதிமுக, திமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மட்டும் பரிசீலனை செய்யப்பட்டு சிறிதுநேரம் நிறுத்திவைக்கப்பட்டது.

பின்னர் தேர்தல் ஆணையத்திடம் இரண்டு கட்சிவேட்பாளர்களும் நேரில் சென்று விளக்கம் அளித்த பிறகு அவர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தமுன்னாள் அமைச்சர் கோகுலா இந்திரா கூறியதாவது:

தேர்தல் அலுவலர்கள் திமுக வேட்பாளரின் வேட்புமனுவை பரிசீலிக்க எடுத்தபோது சுயேச்சை வேட்பாளரின் வேட்புமனுவை சரிபாருங்கள் என திமுகவினர் நல்லவர்போல் தங்களை காட்டிக்கொண்டு விளம்பரம் தேட முயற்சிக்கின்றனர்.

இதிலிருந்தே நன்றாக தெரிகிறது... திமுக புத்தி எப்பொழுதும் குறுக்கு புத்திதான் என்று. தயாநிதி மாறன் வேட்புமனுவில் இணைத்திருந்த வருமான வரி ஆவணங்களில் குறைகள் இருப்பதாக தகுந்த ஆதாரங்களுடன் தேர்தல் அலுவலர்களிடம் கொடுத்தோம்.

அதனால் அவரது வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து திமுக தரப்பில் அதிமுக கூட்டணி வேட்பாளரான சாம்பாலுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கக் கூடாதுஎன கூறுகின்றனர். இதிலிருந்து அதிமுக கூட்டணி வேட்பாளர் சாம்பாலை பார்த்து தயாநிதி மாறன் பயப்படுகிறார் என்பது தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுலா இந்திரா செய்தியாளர் சந்திப்பு

Intro:

Body:Visual

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.