ETV Bharat / state

போலி ஆவணத்திற்கு இழப்பீடு: தமிழக அரசை எச்சரித்த உயர்நீதிமன்றம்! - through forged documents

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துதலில் போலி நில ஆவணங்களை காண்பித்தவர்களுக்கு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை திரும்பபெறாவிட்டால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தமிழ்நாடு அரசை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Etv Bharatபோலி ஆவணம் மூலம் இழப்பீடு வாங்கியவர்கள் மீதான நடவடிக்கை  - தமிழக அரசை எச்சரித்த  சென்னை உயர் நீதிமன்றம்

author img

By

Published : Nov 28, 2022, 10:30 PM IST

சென்னை: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றபோது, ஒரு சிலர் போலி ஆவணங்களை காண்பித்து அரசிடம் 20 கோடி ரூபாய் வரை இழப்பீடு பெற்றுள்ளதாக கூறி ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிலத்தின் உண்மையான உரிமையாளருக்கு தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி மீண்டும் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா, வட்டாட்சியர் மீனா ஆகியோர் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு ஆஜராகினர். மாவட்ட ஆட்சியர் பொன்னையா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், இழப்பீடு வழங்குவதற்கும் மாவட்ட ஆட்சியருக்கும் தொடர்பில்லை என்றும், தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் நில கையகப்படுத்த மாவட்ட வருவாய் அதிகாரிக்குத் தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளதாக தெரிவித்தார்.

சிபிசிஐடி காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், இதுவரை 4 கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அப்போது நீதிபதி தண்டபாணி, போலி ஆவணங்களை காண்பித்து இழப்பீடு பெற்றவர்கள் தொடர்பாக சிபிசிஐடி நடத்திவரும் விசாரணையில் திருப்தி இல்லை, இழப்பீடாக கொடுக்கப்பட்ட தொகை பொதுமக்களுடையது. அந்த பணத்தை முறைகேடாக பெற்றவர்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும். பொதுமக்களுடைய பணம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த நீதிமன்றத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

மக்கள் வரிப்பணத்தை ஏமாற்றியவர்கள் மீது கருணை காட்ட முடியாது என்றும், தவறாக கொடுக்கபட்ட இழப்பீட்டு தொகையை திரும்ப பெறாவிட்டால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்றும் எச்சரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை டிசம்பர் 2-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க:வேகமாக பைக் ஓட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.