ETV Bharat / state

தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்வினைப் பாதுகாத்திடுங்கள் - திருமாவளவன் - தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள்

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தினார்

தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்

author img

By

Published : Nov 15, 2022, 7:13 PM IST

சென்னை: தேயிலைத் தோட்டத்தில் வசிக்கும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் மலையகத் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி, சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டைமான் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், 'TANTEA நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அவர்கள் அனைவரையும் அதே குடியிருப்பில் தங்க வைத்து, அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம்.

பணி ஓய்வுபெற்ற 670 குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கும் அரசு செலவில் முழுமையாக வீடுகள் கட்டித் தரப்படும் என்றும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் அரசு கவனித்துக்கொள்ளும் என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு தமிழ்நாட்டில் முழு உருவச்சிலை நிறுவ வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதலமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்.

கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இளங்கோ இருக்கை அமைக்க வேண்டும். மனோன்மணியம் சுந்தரனார் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் வைத்துள்ள கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளோம்.

பொருளாதார அளவுகோலை கொண்டு இட ஒதுக்கீடு வழங்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளோம். 10% இட ஒதுக்கீட்டை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்று மக்களிடையே விளக்க தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்துவதென திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மழையால் மக்கள் பெருமளவு பாதிக்காத வகையில் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுதலுக்குரியது. குறிப்பாக, சென்னை மாநகரம் பாதுகாப்பாக இருக்கக்கூடிய வகையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

'தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்'

மழைக்காலத்தில் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது’ என்றார்.

இதையும் படிங்க: பிரியா மரணம்: சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்கும்படி காவல்துறைக்கு கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.