தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில், 'தேசிய கைத்தறிக் கண்காட்சி - 2019' என்கிற பெயரில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இதனை தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான கைத்தறி ஆடைகளை வாங்கிச்செல்கின்றனர். இந்த கண்காட்சி குறித்து வாடிக்கையாளர்கள் கூறுகையில், ‘இருபதாம் நூற்றாண்டினை நாம் கடக்கும் நிலையில் இருந்தாலும், நாகரீகம், கலாசாரம் மற்றும் தொழில்நுட்பங்கள் மாறிவந்தாலும், இன்றும் தங்களை மாற்றிக்கொள்ளாமல் அதே சமயம் தாங்கள் நெய்யும் ஆடைகளில் பல்வேறு மாற்றங்களைப் புகுத்தி கைத்தறி தொழிலை செய்துவரும் நெசவாளர்களின் உழைப்பு அளப்பரியது’ என்றனர்.