பொருள்கள் மற்றும் சேவை வரிகளை (ஜிஎஸ்டி) பொறுத்தமட்டில், 2017-18ஆம் ஆண்டில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 4,073 கோடி ரூபாய். மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகைகள் உரிய நேரத்தில் வரும் என எதிர்பார்த்தாலும் 2021-22 வரவு, செலவு திட்டத்தில் 46,195.55 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2021-22ஆம் ஆண்டில் 1,52,270.66 கோடி ரூபாயாகவும், 2022-23ஆம் ஆண்டில் 1,73,664.49 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019-20ஆம் ஆண்டு வரவு, செலவு திட்ட மதிப்பீட்டில் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார் வாகன வரி வருவாய், பொருளாதார தேக்க நிலையின் காரணமாக 6018.63 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. 2020-21ஆம் ஆண்டில் வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் 14,435.09 கோடி ரூபாயாகவும் பொதுவான பொருளாதார வளர்ச்சி அடிப்படையில், வரும் ஆண்டுகளில் 14 சதவிகிதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட்: தமிழ்நாடு உணவுப் பொருள் வணிக வளாக தலைவரின் நேர்காணல்