தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் முதலமைச்சர் நல்ல ஆரோக்கியத்துடன் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டி எழுதிய கடிதத்தை ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆனந்தராவ் விஷ்ணு பாட்டில் முகாம் அலுவலகத்தில் வழங்கினார். ஆளுநர் எழுதிய கடிதத்தின் விவரம், ”கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகுந்த கவலையுற்றேன்.
வலிமை மிக்க தலைவரான தாங்கள், முக்கியமாக பொது மக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால், இந்தத் தொற்றுக்கு ஆட்பட்டிருக்கிறீர்கள். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வாடிய ரோஜா மாலைகளுடன் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள்