ETV Bharat / state

கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு - சென்னை மாவட்ட செய்திகள்:

அங்கன்வாடி, சத்துணவு திட்ட நேரடி பணிநியமனங்களில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
author img

By

Published : Nov 10, 2021, 11:02 AM IST

சென்னை : இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட அளவில் இனசுழற்சி முறையை கடைப்பிடிக்க வேண்டும். அதில் பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்தத் துறையால் வெளியிடப்படும் இடஒதுக்கீட்டு ஆணைகள் கடைப்பிடிக்க வேண்டும் என ஏற்கனவே ஆணையிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் பெண்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

அதேபோல எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் போன்ற பணியிடங்களில் 25 விழுக்காடு பணியிடங்களை விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோரை கொண்டு நிரப்ப வேண்டும்.

மேலும், இந்த பணியிடங்களை நேரடி நியமனங்களில் நிரப்பும் போது, 25 விழுக்காடு பணியிடங்களை விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் நிரப்ப வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உருண்டு புரண்டு பைக் ரைடருடன் காவலர் சண்டை செய்யும் காட்சி வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.