சென்னை புழல் அந்தோனியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகமது ரபிக்(28). இவர் ஷேர் மார்க்கெட்டிங் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (ஜன.27) வியாசர்பாடி பிவி காலனியில் உள்ள அவரது நண்பரான விஜயகுமார் (27) என்பவரது வீட்டிற்கு சென்று ரபிக் பேசி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அங்கு காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் தங்களை காவல்துறையினர் என்று அறிமுகப்படுத்தி, ரபிக்கை விசாரிக்க வேண்டும் என காரில் அழைத்து சென்றனர். பின்னர் ரபிக்கிடம் கைது செய்யக்கூடாது என்றால் 2.50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என அந்த கும்பல் மிரட்டியது.
இதற்கு ரபீக் மறுப்பு தெரிவித்ததால் அவரை அடித்து வாகனத்தில் இருந்த ஏ.டி.எம் கார்டை பறித்து 2.50 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, ரபிக்கை மாதவரம் ரவுண்டானாவில் இறக்கிவிட்டு சென்றனர். இது குறித்து ரபீக் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ரபிக்கை மிரட்டியது காவலர்கள் போல் வேடமிட்டு வந்த போலி கும்பல் என தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: போட்டோ ஸ்டுடியோவை குறி வைக்கும் கும்பல்... டிஜிட்டல் கேமராக்கள் கொள்ளை!