இன்று கூடிய சட்டப்பேரவையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மதிவாணன் பேசுகையில், மீனவர் பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா, மீனவர்களுக்கான திட்டங்கள் ஏதேனும் வகுக்கப்பட்டுள்ளனவா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்:
"இலங்கையிலிருந்து மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். படகுகளும் மீட்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில்தான் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். படகுகள் ஓட்டையாக்கபட்டன, மீனவர்கள் துன்புறுத்தப்பட்டனர். ஆனால் அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல், பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூரில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி: மாணவர்கள் பங்கேற்பு!
கச்சத்தீவு உங்கள் ஆட்சி காலத்தில்தான் தாரை வார்க்கப்பட்டு விட்டது. மீனவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. நீலப் புரட்சி திட்டம், பாக் ஜலசந்தி மீனவர்கள் திட்டம் ஆகியவை மீனவர் நலனுக்காக செயல்படுத்தப்படுகிறது" என பதில் அளித்தார்.