ETV Bharat / state

மனைவிகளுக்குள் சண்டை - இரண்டாவது மனைவி பரிதாபம் - chennai

சென்னை : செங்குன்றத்தில் குடும்பத்தகராறு காரணமாக முதல் மனைவி இரண்டாவது மனைவியை அறுவாமனையால் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : May 12, 2019, 7:49 PM IST

செங்குன்றம் பாடியநல்லூர் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரஷீத். இவர் செங்குன்றத்தில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வருகிறார். முகமது ரஷீத், சுராகாதுன் என்பவரை திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தனது உறவுப்பெண்ணான சுரானா பேகம் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து தனது இரண்டாவது மனைவியை தனது வீட்டின் அருகிலேயே வாடகை வீட்டில் குடியமர்த்தியிருந்தார். முகமது ரஷித் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது அவரது முதல் மனைவி சுராகாதுனுக்கு பிடிக்கவில்லை.

சென்னை, செங்குன்றம்

இதனால், ரஷித் வீட்டில் இல்லாத நேரம் சுரானா பேகத்திடம், சுராகாதுன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில், முகமது ரஷித் இன்று அதிகாலை வேலைக்குச் சென்றவுடன் முதல் மனைவி சுராகாதுன், சுரானா பேகத்திடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மன உளைச்சலுக்கு ஆளான முதல் மனைவி சுராகாதுன், திடீரென்று சமையலறையில் உள்ள காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து சுரானா பேகத்தை தாக்கியுள்ளார். இதில், கழுத்திலும், முகத்தின் தாடையிலும் வெட்டு விழுந்து கீழே மயங்கி விழுந்தார். சுரானா பேகம் அலறும் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் இருந்த ரஷித்தின் இரண்டாவது மனைவியை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இந்த சம்பவத்தையடுத்து, முதல் மனைவி சுராகாதுன் செங்குன்றம் காவல் நிலையத்தில் சரண் அடைந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தகராறு காரணமாக முதல் மனைவி இரண்டாவது மனைவியை கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:செங்குன்றத்தில் குடும்பத்தகராறு காரணமாக முதல் மனைவி இரண்டாவது மனைவியை கத்தியால் வெட்டி காயம் மருத்துவமனையில் அனுமதி

Body:செங்குன்றம் பாடியநல்லூர் ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரஷீத் இவர் செங்குன்றத்தில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வருகிறார் இவருக்கு எட்டு வருடம் முன்பு சுராகாதுன் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தையுடன் வசித்து வருகிறார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது உறவுப்பெண்ணான சுரானா பேகம் என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து தனது வீட்டின் அருகே தனியாக வாடகை வீட்டில் வைத்திருந்தார் முதல் மனைவியும் இரண்டாவது மனைவியும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு பின்பு சமாதானமாகி விடுவார்கள் இந்நிலையில் நேற்றிரவு இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது இன்று அதிகாலை கணவர் வேலைக்கு சென்றவுடன் மறுபடியும் பிரச்சினை தொடர அடிக்கடி நிகழும் இச்சம்பவத்தினால் மன உளைச்சலுக்கு ஆளான முதல் மனைவி திடீரென்று சமையலறையில் உள்ள காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து இரண்டாவது மனைவி தாக்கினார் இதில் கழுத்திலும் முகத்தின் தாடையிலும் வெட்டு விழுந்தது இதனால் அலறி துடித்த இரண்டாவது மனைவி அருகில் உள்ளவர்கள் சத்தம் கேட்கவே அங்கே சென்று ரத்த வெள்ளத்தில் இருந்த இரண்டாவது மனைவியை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் காயம் ஏற்படுத்திய முதல் மனைவி போலீசுக்கு பயந்து அவ்விடத்தில் இருந்து தலைமறைவாகி விட்டார் விவரம் அறிந்த செங்குன்றம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர் இதற்கிடையில் முதல் மனைவி செங்குன்றம் காவல் நிலையத்தில் சரண் அடைந்ததாக கூறப்படுகிறது இது சம்பந்தமாக செங்குன்றம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து குடும்ப சண்டையில் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய முதல் மனைவி கைது செய்து விசாரணை செய்து வருகிறார்

Conclusion:குடும்பத்தகராறு காரணமாக முதல் மனைவி இரண்டாவது மனைவியை கழுத்தை அறுத்து அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.