ETV Bharat / state

நாளை அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் தேசிய மாநாடு - பல மாநில தலைவர்கள் பங்கேற்பு - சீதாராம் யெச்சூரி

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. இதில், அசோக் கெலாட், ஹேமந்த் சோரன், சீதாராம் யெச்சூரி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு மாநில தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

First
தமிழ்நாடு
author img

By

Published : Apr 2, 2023, 3:43 PM IST

சென்னை: சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு நாளை(ஏப்ரல்.3) நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே மாலை 4.30 முதல் 7 மணி வரை நடைபெறவுள்ளது. சமூக நீதிக்கான போராட்டத்தையும், சமூக நீதி இயக்கத்திற்கான தேசிய கூட்டு திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வகையல் இம்மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களிலிருந்து முதலமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடியாகவும், வீடியோ கான்பரன்சிங் மூலமாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த தேசிய மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றவுள்ளார். சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்பாளர் ஓய்வு பெற்ற நீதியரசர் வி. ஈஸ்வரய்யா வரவேற்புரை ஆற்றவுள்ளார். ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி. வில்சன் முதன்மை உரையாற்றவுள்ளார்.

இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தர பிரதேச மாநில எதிர்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரைன், தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மகாராஷ்டிரா துணை முதலமைச்சருமான சஜன் சந்திரகாந்த் புஜ்பால், ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், பீகார் - ராஷ்டிரிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இ.டி. முகமது பஷீர், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் கே. கேசவ ராவ், ராஷ்டிரிய சமாஜ்பக் தேசிய தலைவரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சருமான மகாதேவ் ஜன்கர், அசாம் நாடாளுமன்ற உறுப்பினர் நபா குமார் சாரானியா, ஹரியானா லோக்தந்திர சுரக் ஷா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார் சயினி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதேபோல் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.

இதையும் படிங்க: வைக்கம் போராட்டம் தான் அம்பேத்கரையும், காந்தியையும் போராடத் தூண்டியது - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.