சென்னை: தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரதாப் குமார் (25). இவர் சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவர் ’’தெக்கத்தி வீரன்’’ என்ற புதிய திரைப்படத்தின் தயாரிப்பு மேலாளருக்கு உதவியாளராக இருந்து வந்துள்ளார்.
கடந்த 20 நாட்களாக இந்த படப்பிடிப்புக்காக இங்கு தங்கி வந்த நிலையில், நேற்று இரவு அதிகபடியான மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடிபோதையில் இருந்த பிரதாப் குமார் இன்று (ஏப்ரல் 15) அதிகாலை 2 மணியளவில், தான் நின்று கொண்டிருந்த மூன்றாவது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.மேலும், இச்சம்பவம் தொடர்பாக அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் நாளொன்றுக்கு 15 காவலர்கள்வரை கரோனா பாதிப்பு - காவல் துறை ஆணையர்