ETV Bharat / state

'இந்தாங்க, ராஜினாமா கடிதம்'- தலைமை காவலரின் முடிவால் கலகலக்கும் காவல்துறை! - தலைமைக் காவலர் பணியை ராஜினாமா செய்கிறேன்

சென்னை: காவலர் குடியிருப்பில் மது விற்பனை செய்ததாக காவலர்களுக்குள் நடந்த மோதல் விவகாரத்தில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமைக் காவலர் தனது பணியை ராஜினாமா செய்வதாக வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமைக் காவலர்
தலைமைக் காவலர்
author img

By

Published : Jun 3, 2020, 2:07 AM IST

சென்னை டிபி சத்திரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தலைமைக் காவலர் வெங்கடேஷ்வர ராவ். இவரது குடியிருப்பில் கடந்த 10 ஆம் தேதி உளவுப்பிரிவு தலைமை காவலர் கார்த்திகேயன் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை தட்டி கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டு, ராவும், கார்த்திகேயனும் மோதி கொண்டனர். இவர்கள் மோதி கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் உடனடியாக இரண்டு காவலர்களையும் பணி நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமை காவலர் வெங்கடேஷ்வர ராவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "கள்ளச் சந்தையில் மதுவிற்பனை செய்ததை தட்டி கேட்டதற்காக தீர விசாரிக்காமல் காவல் ஆணையர் என்னை பணியிடை நீக்கம் செய்தார். குறிப்பாக தான் வசித்து வந்த காவலர் குடியிருப்பையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக காவல் துறை உயர் அலுவலர்களை சந்தித்து முறையிட்டும் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடுத்தேன்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என் மீது தவறில்லை. காவலர் குடியிருப்பை மீண்டும் கொடுத்து பணியை திரும்ப வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். மேலும், குற்றம்செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அம்பத்தூர் அயப்பாக்கத்தில் பிறந்து வளர்ந்ததற்காக அங்கு வசிக்கும் ஏழை எளிய மாணவர்களை படிக்க வைத்து வருகிறேன். அங்கு குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபரை கைது செய்ய உதவி புரிந்துள்ளேன்.

வெங்கடேஷ்வர ராவ்

இதுமட்டுமில்லாமல் 21 ஆண்டுகள் காவல் துறையில் சிறப்பாக பணிப்புரிந்ததற்காக முதலமைச்சர் விருதும், 38 முறை வெகுமதி பரிசையும் பெற்றுள்ளேன். இந்நிலையில், காவல்துறையினர் தீர விசாரணை நடத்தாமல் பணி நீக்கம் செய்தது வேதனையளிக்கிறது.

இதனால் காவல்துறையில் மீண்டும் பணிபுரிய விருப்பமில்லை. நான் ராஜினாமா கடிதத்தை கொடுக்க இருக்கிறேன். இது எனக்கு நானே எடுத்த முடிவு" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நளினி, முருகன் தாக்கல்செய்த வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.