ETV Bharat / state

மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு; பதிவு, முன்னுரிமை பட்டியல் தயாரிப்பது எப்படி? - tnhealth

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் துணை இயக்குநர் எஸ்.பி.கராமத் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பதிவு செய்வதற்கான வழிமுறைகளை விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 25, 2023, 8:33 PM IST

Updated : Jul 26, 2023, 8:55 AM IST

மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வழிமுறைகள்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி, இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரி, தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி, தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்கள், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைத் தேர்வு செய்வதற்கு இன்று முதல் 31-ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் பதிவு துவங்கி உள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், "அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் உள்ள இடங்களில் சேர்வதற்கு ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரையில் தரவரிசை எண் 1 முதல் 25,856 வரையிலும், நீட் தேர்வு மதிப்பெண் 720 முதல் 107 மதிப்பெண் வரை பெற்றவர்கள் பங்கேற்றலாம்.

அதேபோல் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் உள்ள இடங்களில் சேர்வதற்கு ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரையில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான தரவரிசை எண் 1 முதல் 13,179 வரையிலும், நீட் தேர்வு மதிப்பெண் 720 முதல் 107 மதிப்பெண்கள் வரை பெற்றவர்கள் பங்கேற்றலாம்.

இவர்களுக்கான இடங்கள் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகியத் தேதிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3ஆம் தேதி கல்லூரியின் இடங்கள் ஒதுக்கீடு செய்து அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்.

மாணவர்கள் விண்ணப்பப் பதிவு கட்டணமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 500 ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1000 ரூபாயும் செலுத்த வேண்டும். மேலும், வைப்புத் தொகையாக மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி, மாநில தனியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்காக ரூ.30,000 செலுத்த வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் ரூபாய் 1 லட்சம் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும்.

கலந்தாய்வு, கல்லூரிகளின் விவரங்கள் மற்றும் கட்டண விவரம் www.tnhealth, tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் துணை இயக்குநர் எஸ்.பி.கராமத் (S.P.Karamath) மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பதிவு செய்வதற்கான வழிமுறைகளை விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், "மாணவர்கள் மருத்துவ இடங்களை பதிவு செய்யும் போது, தகவல் தொகுப்பேடு தான் இறுதியானது. மாணவர்களுக்கான விண்ணப்ப பதிவு முடிந்து, தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பும் இடங்களைத் தேர்வு செய்வதற்கு கல்லூரியின் விவரங்களை 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்து உள்ளனர்.

அரசு, நிர்வாக ஒதுக்கீடு, என்ஆர்ஐ ஆகிய இடத்திற்கும் பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் தேர்வுக் குழுவிற்கு நேரடியாக விண்ணப்பம் செய்வதால் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். அரசு ஒதுக்கீட்டு இடம், நிர்வாக ஒதுக்கீட்டு இடம், என்ஆர்ஐ ஆகியவற்றின் கீழ் இடங்களைத் தேர்வு செய்வதற்கான பதிவின் போது இணையதளத்தில் தெரியும். அதன் படி கட்டணங்களை செலுத்திப் பதிவு செய்ய வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விரும்பும் கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றம் செய்ய முடியும். இறுதிச் செய்யப்பட்டபின்னர் மீண்டும் மாற்ற முடியாது. மாணவர்கள் எவ்வளவு வரிசை உள்ளதோ உங்களுக்கு விரும்பும் வரிசையில் பதிவு செய்யலாம். முதல் சுற்றுக் கலந்தாய்வில் இடங்களை அரசு, தனியார் ஒதுக்கீட்டு இடங்களுக்கும் பதிவு செய்யலாம்" என தொிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கால்நடை மருத்துவப் படிப்பிற்கு தரவரிசைப் பட்டியல் தயார்... நாளை வெளியீடு!

Last Updated : Jul 26, 2023, 8:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.