ETV Bharat / state

வேளாண்மை, மீன்வளம் படிக்கணுமா? - அப்ப இதைப் படிங்க! - ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு நாளை வெளியிடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வேளாண்மை, மீன்வளம் படிப்பிற்கு விண்ணப்பிக்க தேதி நாளை அறிவிப்பு!

author img

By

Published : May 7, 2023, 2:18 PM IST

சென்னை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கி வரும் 18 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 12 இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு 2023-24ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு நாளை வெளியிடப்பட உள்ளது.

இளநிலை அறிவியல் (பிஎஸ்சி) பாடப்பிரிவுகளில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை (தமிழ் வழி), தோட்டக்கலை (தமிழ் வழி), வனவியல், உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், இளநிலை தொழில்நுட்பம் (பி.டெக்) (வேளாண் பொறியியல்) பி.எஸ்.சி பட்டுவளர்ப்பு, பி.டெக் உணவு தொழில் நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், பி.எஸ்சி வேளாண் வணிக மேலாண்மை ஆகியவற்றிற்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

2022 - 2023ம் கல்வியாண்டில் இந்தப் படிப்புகளில் உறுப்புக்கல்லூரிகளில் 2,148 இடங்களும்; இணைப்புக் கல்லூரிகளில் 2,007 இடங்களும் இருந்தன. இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் https://tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல், கடந்தாண்டு வரையில் தனியாக நடத்தப்பட்டு வந்த தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் இளநிலைப் படிப்புகளில் உள்ள இளநிலை மீன்வள அறிவியல், பி.டெக், இளநிலை தொழில்படிப்பு ஆகிய 9 பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கைக்கும் விரைவில் விண்ணப்பிக்கும் தேதியை அறிவிக்க உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெண்களுக்கு மட்டும் டிரஸ் கோடு ஏன்? - கனிமொழி எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.