சென்னை: இயக்குநர் நெல்சன் நடிகர் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' திரைப்படத்தை இயக்குகிறார். இவர் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் மூலம் தமிழில் வெற்றி இயக்குநராக வலம் வந்தார். இவரது படங்களில் டார்க் காமெடி மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. இதனால், விஜய்யை வைத்து 'பீஸ்ட்' என்ற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார், நெல்சன். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
மேலும், பீஸ்ட் திரைப்படம் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளானது. பீஸ்ட் திரைப்படம் விமர்சனத்துக்கு உள்ளான பட்சத்திலும் நெல்சனுக்கு மீண்டும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. நெல்சன் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அதிக பொருட்செலவில் தயாராகும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, நெய்வேலி, ஹைதராபாத், கொச்சின் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மாபெரும் பொருட்செலவில் நடைபெற்று முடிந்துள்ளது. ஆக்சன் கலந்த படமாக உருவாகும் இந்த ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் 'முத்துவேல் பாண்டியன்' என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அடுத்த மாதம் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்று அப்டேட் வந்துள்ளது.
அதாவது முதல் பாடல் எப்போது என்று நாளை மாலை 6 மணிக்குச் சொல்கிறோம் என்று படக்குழு வழக்கம் போல் வித்தியாசமான வீடியோ மூலம் அறிவித்துள்ளது. அதில் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி, அதுக்கான ப்ரோமோவும் ரெடி, ப்ரோமோவுக்கு ப்ரோமோவும் ரெடி என்று படக்குழு சார்பில் சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அனிருத் வீடியோ கேம் விளையாடிக்கொண்டு இருக்கிறார். அப்போது நெல்சனிடம் இருந்து போன் வருகிறது. அதனை கட் செய்யும் அனிருத், 'எத்தனை தடவை தான் கட் செய்வது. போன் எடுத்தால் ப்ரோமோ ரெடியா என்று கேட்பார். அதை நாளைக்கு பார்த்துக்கலாம்’ என்று அனிருத் சொல்வார். இப்படி ரகளையான வீடியோ வெளியிட்டு படத்துக்கான எதிர்பார்ப்பை படக்குழு அதிகரித்துள்ளது.
-
First Single ready. Announcement Promo Ready. Promo ku Promo-um ready 😉
— Sun Pictures (@sunpictures) July 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
⁰#JailerFirstSingle Update Tomorrow at 6pm.⁰@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu… pic.twitter.com/EVaLlrp4XK
">First Single ready. Announcement Promo Ready. Promo ku Promo-um ready 😉
— Sun Pictures (@sunpictures) July 2, 2023
⁰#JailerFirstSingle Update Tomorrow at 6pm.⁰@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu… pic.twitter.com/EVaLlrp4XKFirst Single ready. Announcement Promo Ready. Promo ku Promo-um ready 😉
— Sun Pictures (@sunpictures) July 2, 2023
⁰#JailerFirstSingle Update Tomorrow at 6pm.⁰@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu… pic.twitter.com/EVaLlrp4XK
இசையமைப்பாளர் அனிருத் தற்போது விஜயின் லியோ படத்திற்கு இசையமைக்கிறார். மேலும்,இப்படத்தின் 'நா ரெடி' பாடல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம் கவலையில்லை... இரண்டு நாட்களில் யதார்த்தம் புரியும்... சரத் பவார் விளக்கம்!