தமிழ்நட்டில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கரோனாவை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நாளை (மே. 6) முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது.
அதில், மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பின் தற்போதைய நிலை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் காணொலிக் காட்சி மூலம் நேற்று (மே. 4) ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, மே 6 ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் படுக்கை வசதிகள் இல்லாததால் கரோனா நோயாளிகள் அவதி!