ETV Bharat / state

காலை சிற்றுண்டி திட்டத்தை ஆரம்பித்த முதலமைச்சரே அதை அவமானப்படுத்தியுள்ளார் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

காலை சிற்றுண்டித் திட்டத்தை ஆரம்பித்த முதலமைச்சரே அதை அவமானப்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

காலை சிற்றுண்டித் திட்டத்தை ஆரம்பித்த முதலமைச்சரே அதை அவமானப்படுத்தியுள்ளார் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

author img

By

Published : Sep 15, 2022, 1:16 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, அதிமுக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “நரிக்குறவர்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான். மீனவர்கள் இனத்தையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தியது.

ஆனால் திமுக அரசு இதுகுறித்து எதையும் செய்யவில்லை. அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக சொல்லும் திமுக அரசு, எதிர்கட்சிகளை முடக்கும் நோக்கத்தில் செயல்படுகிறது. பெயர் சூட்டுவதில் மட்டுமே பிரம்மாண்டம் காட்டுகிறது, திமுக அரசு.

காலை சிற்றுண்டித் திட்டத்தை ஆரம்பித்த முதலமைச்சரே அதை அவமானமும் படுத்தியுள்ளார். திட்டத்தை தொடங்கி வைத்து அதில் கை கழுவுவது விவசாயிகளை அவமானப்படுத்தும் செயல். திமுக அரசு சொன்ன வாக்குறுதிகளை எதையுமே நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்தவில்லை.

பெண்களுக்கு உரிமைத்தொகை, நீட் தேர்வு மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் வாங்க திமுகவால் முடியவில்லை. ஓ.பி.எஸ் - பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திப்பு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஜெயலலிதாவாக என்னை பார்க்கிறார்கள் என சசிகலா கூறியது, சசிகலா சிரிக்காமல் நிறைய ஜோக் சொல்லி வருகிறார்.அவருக்கு sense of humour அதிகம்.

அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் இல்லாத நிலை நிலவி வருகிறது. அதிக அளவில் காய்ச்சல் பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: காலை உணவுத் திட்டம்: சலுகை, தர்மம், இலவசம் என யாரும் எண்ணக்கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.