ETV Bharat / state

'எல்லாத்திற்கும் தலையை ஆட்டிக்கொண்டிருக்காமல் வேளாண் சட்டங்களை முதலமைச்சர் எதிர்க்க வேண்டும்'- சீமான் - சென்னை

கூட்டணி கட்சி என்பதால் எல்லாத்திற்கும் தலையை அசைக்காமல் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

The Chief Minister should oppose farm laws says seeman
'எல்லாத்திற்கும் தலையை ஆட்டிக்கொண்டிருக்காமல் வேளாண் சட்டங்களை முதலமைச்சர் எதிர்க்க வேண்டும்'- சீமான்
author img

By

Published : Dec 19, 2020, 7:09 PM IST

சென்னை: டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ”பஞ்சாப், ஹரியான விவசாயிகளுக்கு துணைநிற்கும் வகையில் இந்தப் போாரட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்திவருகிறது. புதிய வேளாண் சட்டம் உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவற்றை அத்தியாவசியப் பொருட்கள் இல்லை என கூறுகிறது.

இந்தச் சட்டத்தை திருத்தவேண்டாம், சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. மத்திய அரசு கொண்டுவந்துள்ள எல்லாச் சட்டங்களையும் எதிர்க்கிறோம் என கூறுகிறார்கள். எதிர்க்கும் விதத்தில் சட்டம் கொண்டுவந்தால் எதிர்க்கத்தான் செய்வோம். இந்தச் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால், தேர்தல் காலத்தில் அம்மியில் மசாலா அரைப்பது போல் அரைத்துவிடுவோம்.

'எல்லாத்திற்கும் தலையை ஆட்டிக்கொண்டிருக்காமல் வேளாண் சட்டங்களை முதலமைச்சர் எதிர்க்க வேண்டும்'- சீமான்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போல் தமிழ்நாடு முதலமைச்சரும் இந்தச் சட்டங்களை எதிர்க்கவேண்டும். அதைவிட்டு இது நல்லச்சட்டம் எனக் கூறக்கூடாது. கூட்டணி வைத்ததால், எல்லாத்திற்கு தலையை அசைத்துக்கொண்டிருக்கக்கூடாது. ஸ்டாலினுக்கும் விவசாயத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. முதலமைச்சர் விவசாயி என்பதால், அதைப்பற்றி பேசுகிறார்" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இந்தியா எங்கள் நாடு. எங்களை ஆன்ட்டி இந்தியன் என்று கூறுவதற்கு இவர்கள் யார். திமுக தலைவர் ஸ்டாலினை தரகர் என முதலமைச்சர் விமர்சித்தது தவறு. தேர்தல் நெருங்குவதால், இந்தப் பொங்கல் தேர்தல் பொங்கலாக இருக்கும். விவசாயிகளின் போராட்டங்களுக்கு மத்திய அரசிடம் பதில் இல்லை. ஆகையால், குளிர்கால கூட்டத்தொடரை கூட்டவில்லை. கரோனா வைரஸைவிட பெரிய வைரஸிடம் நாடு சிக்கியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவான நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.