ETV Bharat / state

சென்னை மக்களுக்கு இனி மழைநீர் தேக்கம் இருக்காது; முதலமைச்சர் உறுதி

இனிவரும் ஆண்டுகளில், மழைநீர் தேக்கம் இல்லாத பருவமழைக் காலங்களை சென்னை மக்கள் கண்டிப்பாக பார்க்க இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை மக்களுக்கு இனி மழைநீர் தேக்கம் இருக்காது: முதலமைச்சர் உறுதி

author img

By

Published : Jan 31, 2023, 10:56 PM IST

சென்னை: மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் மழைக்காலங்களில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் நேரு, சேகர் பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: "மழை வெள்ளக் காலங்களில் தடுப்புப் பணிகளில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்குப் பாராட்டு விழா என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக்கூடிய இந்த மகத்தான விழாவில் நானும் பங்கேற்பதில் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு எத்தனையோ பாராட்டு விழாக்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அந்த விழாக்களையெல்லாம் விட, உங்களைப் பாராட்டக்கூடிய இந்த விழாவைத் தான் நான் பெருமையாகக் கருதுகிறேன் என்றார்.

அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், நம்முடைய அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியிருக்கிறது. இதில் மிகமிக முக்கியமான இரண்டு சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம். அந்த இரண்டு சாதனைகளைப் படைத்த காரணத்தால், மக்களிடத்திலே நமக்கு மிகப் பெரிய பாராட்டு கிடைத்திருக்கிறது. ஒன்று, கரோனா என்ற கொடிய நோயை எதிர்த்து அதை வென்றோம். அது ஒரு பாராட்டு. இரண்டாவது, மழை, வெள்ளத்தில் இருந்து மக்களைக் காத்தோம், அது இரண்டாவது பாராட்டு என்றார்.

மேலும், கரோனாவை கட்டுப்படுத்தியதற்குப் பிறகு உடனடியாக ஒரு மிகப்பெரிய மழையை நாம் சந்தித்தோம். மழை வெள்ளக் காலத்தில் மக்களிடத்தில் நல்ல பெயர் எடுப்பது மிகமிக சிரமம். அதில் எனக்கு நிறைய அனுபவம் உண்டு. காரணம், நானும் இந்த மாநகராட்சியின் மேயராக இருந்தவன், ஒரு முறையல்ல, இரண்டு முறை, கிட்டத்தட்ட ஏழாண்டு காலம் இருந்தவன். சென்னையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வார்டும் எனக்குத் தெரியும், ஏன் ஒவ்வொரு தெருவும் எனக்குத் தெரியும்.

மழை நின்ற பிறகு மட்டுமல்ல, மழை பெய்துகொண்டு இருக்கும்போதே ரெயின்கோட் போட்டுக் கொண்டு, நம்முடைய கமிஷனரை, நம்முடைய அலுவலரை அழைத்துக்கொண்டு, அந்தப் பணிகளையெல்லாம் நேரடியாக பார்த்தவன் நான். இப்போதும் அப்படித்தான். எனக்கு முன்னால் அதிகாரிகளும் - அலுவலர்களும் - தூய்மைப் பணியாளர்களும் இருப்பார்கள். நான் மட்டுமல்ல, அவர்களும் மழையில் நனைந்தபடியே பணியாற்றியவர்கள் தான். இதுதான் மக்கள் பணி என பேசினார்.

2021-ஆம் ஆண்டு பருவமழையின்போது பெற்ற அனுபவத்தைக் கொண்டு, உடனடியாக நாம் எல்லா வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் குறுகிய காலத்தில் செய்து முடித்தோம். அதன் பயனை 2022-ஆம் ஆண்டு பருவமழையின்போது கண்கூடாகப் பார்த்தோம்.

நம்பர் 1 முதலமைச்சர் - நம்பர் 1 தமிழ்நாடு - ஆகிய உயர்வும் பாராட்டும் என்பது ஒரு பக்கம் என்று சொன்னால், அந்த பாராட்டு தனிப்பட்ட ஸ்டாலினுக்கு கிடைத்த பாராட்டாக நான் கருதவில்லை. ஒரு நாளும் அப்படி நினைக்கமாட்டேன். உங்களுடைய ஒவ்வொருடைய உழைப்பால் தான் அந்த பாராட்டும், அந்த பெருமையும் நமக்கு கிடைத்திருக்கிறது. அதை ஊருக்கு உணர்த்துவதற்காகத்தான் இந்த பாராட்டு விழாவை இன்றைக்கு நாம் வெளிப்படையாக நடத்திக் கொண்டிருக்கிறோம். அனைத்து துறைகளின் அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகிய அனைவரையும் நான் இந்த நேரத்தில் மனதார பாராட்டுகிறேன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:பாஜகவின் நிலைப்பாட்டிற்கு அதிமுக காத்திருக்கட்டும்; தவறு ஒன்றும் இல்லை - நாராயணன் திருப்பதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.