ETV Bharat / state

வெறும் கண்ணால் சூரிய கிரகணம் பார்த்தால் பார்வை பறிபோகும் - அறிவியல் தொழில் நுட்ப மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்று மாலை 5.14 மணி முதல் 5.44 மணி வரையில் பகுதி சூரிய கிரகணம் நிகழ்கிறது. அதனை வெறும் கண்ணால் பார்த்தால் பார்வை இழக்க நேரிடும் என தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் எச்சரித்துள்ளது.

வெறும் கண்ணால் சூரிய கிரகணம் பார்த்தால் பார்வை பறிபோகும்

author img

By

Published : Oct 25, 2022, 5:29 PM IST

Updated : Oct 25, 2022, 6:03 PM IST

சென்னை: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ள தகவலில், ’பூமியானது சூரியனைச் சுற்றிவரும் பாதையை உள்ளடக்கிய தளம் எக்லிப்டிக் தளம் என்றழைக்கப்படுகிறது. நிலவு பூமியை மற்றொரு சிறிய நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. ஆனால், பூமி சூரியனை சுற்றி வரும் தளத்தில் நிலவு பூமியைச் சுற்றுவதில்லை.

எனவே, ஒவ்வொரு சுற்றின்போதும் நிலவு எக்லிப்டிக் தளத்தை இருமுறை சந்திக்கும் சில நேரங்களில் பூமியையும், சூரியனையும் இணைக்கும் கற்பனையான நேர்க்கோட்டில் நிலவு, எக்லிப்டிக் தளத்தைக் கடக்கும் போது மட்டும் சூரியகிரகணம் நிகழ்கிறது.

பூமியிலிருந்து காணும்போது சூரியனும், நிலவும் அளவில் ஒத்திருப்பது போலக் காணப்படுகிறது. இந்தத் தோற்ற அளவுகள் பூமியிலிருந்து அவற்றின் தொலைவுகளைப் பொறுத்தது. சூரியன் நிலவை விட 400 மடங்கு பெரியதாகவும், 400 மடங்கு தொலைவில் இருப்பதாலும், பூமியிலிருந்து காணும்போது சூரியனும், நிலவும் ஒரே அளவாக இருப்பதுபோல் காணப்படுகிறது.

பூமியை நிலவு சுற்றும்பாதை எக்லிப்டிக் தளத்திற்கு சாய்கோணத்தில் இல்லாமல் இருந்திருந்தால் ஒவ்வொரு அமாவாசையின்போதும் சூரிய கிரகணம் நிகழ்ந்திருக்கும். சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது. இந்த நிழல் இரு பகுதிகளைக்கொண்டது. ஒன்று முழு நிழல் பகுதி. மற்றது புறநிழல் பகுதி.

சூரியனை விட பூமியும் நிலவும் அளவில் சிறியதாகையால், பூமி மற்றும் நிலவு தாேற்றுவிக்கும் முழுநிலவுப்பகுதி கூம்பு வடிவில் உள்ளது. செறிந்த இந்த முழு நிழல் பகுதியில் சூரியனின் நேரடியான கதிர்கள் ஊடுருவது இல்லை. இந்த முழுநிழல் பகுதியைச்சூழ்ந்திருப்பது புறநிழல் பகுதியாகும்.

புற நிழல் பகுதியில் சூரியன் ஒரு பகுதியில் இருந்து வரும் ஒளி மட்டும் வந்தடையும். எனவே, புறநிழல் பகுதியில் இருக்கும் ஒருவர் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் காண்பர். மீதப் பகுதியை நிலவு மறைத்திருக்கும். இது பகுதி சூரிய கிரகணமாகும்.

இதுபோன்ற ஒரு பகுதி சூரிய கிரகணம் இன்று நடைபெறுகிறது. ரஷ்யாவின் தெற்குப்பகுதிகள், கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் இருந்து பகுதி சூரியகிரகணத்தைக் காணலாம். உலகளவில் சூரியகிரகணம் மதியம் 2.19 மணிக்கு ஆரம்பித்து, இரவு 6.32 மணிக்கு முடியும். உலகின் எந்தப்பகுதியிலும் முழு சந்திரகிரகணம் நிகழாது. ரஷ்ய நாட்டின் மத்தியப் பகுதிகளில் சூரியனை 80 விழுக்காடு சந்திரன் மறைக்கும்.

சென்னையில் இந்திய நேரப்படி மாலை 5.14 மணிக்கு கிரகணம் லேசாக ஆரம்பித்து 5.44 மணிக்கு மறையும். அதிகபட்சம் 8 விழுக்காடு மட்டுமே சூரிய மறைப்பு இருக்கும். சூரியன் மறையும்முன் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. எனவே, மிகக்குறுகிய காலம் மட்டும் மேற்கு வானில் சூரியன் மறையும் முன் இந்த நிகழ்வு நடக்கிறது. கிரகணம் ஆரம்பிக்கும்போது தொடுவானிலிருந்து சுமார் 7 டிகிரி உயரத்தில் மட்டுமே சூரியன் காணப்படும். இந்தியாவின் மேற்குப் பகுதியில் இந்த நிகழ்வைக் காண இயலும்.

தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் 2020 ஜூன் 21ஆம் தேதி கங்கண சூரியகிரகணத்தைக் காண முடிந்தது. மீண்டும் 2027 ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழ்நாட்டில் இது போன்ற பகுதி சூரியகிரகணத்தைப் பார்க்க முடியும்.

சூரியனை கிரகணத்தின்போது சாதாரணமாகவோ, வெறும்கண்களாலோ அல்லது தொலை நோக்கி அல்லது பைனாகுலர் மூலமாகவோ காணக்கூடாது. அப்படி செய்தால் கண்பார்வையை இழக்க நேரிடும். சூரிய ஒளியை ஒரு சிறிய துளையிட்ட அட்டை ஒட்டப்பட்ட கண்ணாடி மூலம் இருண்ட அறையில் பாய்ச்சி சூரியனின் பிம்பத்தையும் கிரகணத்தையும் காணலாம். பார்ப்பவர்களது கண்ணாடி நிற எண் 14 மூலம் சில விநாடிகள் சூரியனைப் பார்க்கலாம்’ என அதில் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: சூரிய கிரகணம்: மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம்

Last Updated : Oct 25, 2022, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.