ETV Bharat / state

பயிற்சி மருத்துவர்களின் பணி நேரம் குறித்த வழக்கு - மருத்துவக் கல்வி இயக்குநர் கண்காணிக்க உத்தரவு!

அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்பு மாணவர்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

the-case-of-the-working-hours-of-trainee-doctors

author img

By

Published : Oct 4, 2021, 5:23 PM IST

சென்னை : சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில், “தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மேற்படிப்பு மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும் 8 மணி நேரத்துக்கும் மேல் பணியாற்ற நிர்பந்திக்கப்படுகின்றனர்.

பணிச்சுமை காரணமாக பயிற்சி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் உள்ளது. பயிற்சி மருத்துவர்களுக்கு 8 மணி நேர பணியை நிர்ணயித்து 2015ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை உறுதியாக செயல்படுத்த வேண்டும்” என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

8 மணி நேரத்திற்கு மேல் பணி ஒதுக்கீடு

இந்த வழக்கு நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்பு மாணவர்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவருக்கு 8 மணி நேரத்திற்கு மேல் பணி ஒதுக்கீடு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளன. மேலும் இந்தப் புகார் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மருத்துவக்கல்வி இயக்குநர், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திற்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று பிரிவுகளாக பணி

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, அனைத்து மருத்துவக்கல்லூரியில் பணியாற்றி வரும் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலைப் படிப்பு மருத்துவர்களுக்கு 8 மணி நேரம் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் மருத்துவமனையில் நோயாளிகள் அதிகளவில் சேரும் நாள்களில் சில மணி நேரம் கூடுதலாக பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், சில நாள்களில் பணி சுமை குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 8 மணி நேரம் பணி வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் வெளி மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் நேரம் பணியாற்றி வருவதாக பயிற்சி மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மருத்துவமனைகளில் 8 மணி நேரம் வீதம் மூன்று பிரிவுகளாக பணி வழங்கியும் சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட தரமற்ற சக்கர நாற்காலி - அரசு பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.