சென்னை: கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்புகள் இன்று(ஜூலை 18) தொடங்கியுள்ளது. இதனால் பேருந்து மற்றும் மின்சார ரயில் ரூட் மூலமாக வரும் மாணவர்கள் ஒன்று கூடி கல்லூரிக்கு வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர்.
குறிப்பாக செயிண்ட் ஜார்ஜ் பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சாலைகளில் பட்டாசு வெடித்துக்கொண்டே தாங்கள் வரும் ’ரூட் பேனரை’ கையில் ஏந்தியபடி மாணவர்கள் முழக்கமிட்டுக்கொண்டு கல்லூரிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல பல்லாவரம், திருத்தணி, பிராட்வே, பூந்தமல்லி என ரயில், பேருந்து ரூட் மாணவர்கள் தனித்தனியாக முழக்கமிட்டு கல்லூரிக்கு வந்து சிலைக்கு மாலை அணிவித்துச்சென்றனர். அதில் குறிப்பாக 53p ரூட் மாணவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கோயம்பேடு மேம்பாலத்திலிருந்து முழக்கமிட்டுக்கொண்டே கல்லூரிக்கு நடந்து வந்தனர்.
![பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் ’பஸ் டே’ கொண்டாட்டத்தால் பரபரப்பு..!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-busday-script-7202290_18072022153254_1807f_1658138574_868.jpg)
உடனடியாக காவல் துறையினர் அவர்களை வழிமறித்து மற்றொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து உடனடியாக பச்சையப்பன் கல்லூரியைச்சுற்றி கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
![பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் ’பஸ் டே’ கொண்டாட்டத்தால் பரபரப்பு..!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-busday-script-7202290_18072022153254_1807f_1658138574_1013.jpg)