சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து கொச்சிக்கு விமானம் மூலம் பயணம் செல்லவிருந்த பயணிகளின் உடமைகளை மத்திய தொழிற்படையினர் சோதனை செய்தனர்.
அப்போது, கொச்சிக்கு செல்லவதற்காக வந்த ஐரோப்பாவில் உள்ள செக் நாட்டைச் சேர்ந்த பெர்கானா போலஜக்(53) என்பவர் தனது குடும்பத்தினருடன் வந்தார்.
இவரது உடமைகளில் சோதனை செய்தபோது அலரம் அடித்ததுள்ளது. உடனே மத்திய தொழிற்படையினர் அந்த பையை திறந்து காண்பிக்க கூறியுள்ளனர். அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் 9 எம்.எம். அளவு கொண்ட துப்பாக்கி தோட்டா ஒன்று இருந்ததுள்ளது.
உடனே அவரது விமான பயணத்தை ரத்து செய்த அலுவலர்கள் விமான நிலைய காவலர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பெர்கானா போலஜக், சுற்றுலா விசாவில் டெல்லி வந்து, அங்கிருந்து வாரணாசி சென்றதாகவும் அங்கிருந்து சென்னை வந்து கொச்சி செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், தான் விளையாட்டு பயிற்சியாளராக உள்ளதாகவும் தன்னிடம் துப்பாக்கிக்கான உரிமம் இருப்பதாகவும் அவற்றை தனது நாட்டில் வைத்துவிட்டு வந்ததாகவும் ஒரு துப்பாக்கி தோட்டா தவறுதலாக வந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து துப்பாக்கி தோட்டாவை பறிமுதல் செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த தகவல் செக் நாட்டு தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் இருந்தால், தவறுதலாக கொண்டு வந்த துப்பாக்கி தோட்டாவை மட்டும் பறிமுதல் செய்துவிட்டு பின்னர் அவர் விடுவிக்கப்படுவார் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கொழும்புவிலிருந்து கடத்திவந்த 71 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்