சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இன்று இந்தித் திணிப்புக்கு எதிராக அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. முன்னதாக சட்டமன்றத்தில் பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் கட்டாயம் இந்து திணிப்பு என்றால் தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கும் என தெரிவித்தார்.
இது குறித்து செய்திகளிடம் பேசிய நயினார் நாகேந்திரன், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவதாக கூறுவதை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளோம். மாநில சட்டங்களும், தீர்ப்புகளும் அந்தந்த மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். அந்தந்த மாநிலங்களில் தாய்மொழியில் படிக்க வழி வகை உள்ளது என்றார்.
மேலும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை தான் இன்னும் படிக்கவில்லை, படித்த பின்னர் சொல்கிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது' - ஓபிஎஸ்